உட்காரு... எந்திரி! 'மியூசிக்கல் சேர்' போல் மாநகராட்சியில் பதவி:மண்டலம் விட்டு மண்டலம் அதிகாரிகள் மாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 நவ
2019
02:11
பதிவு செய்த நாள்
நவ 20,2019 01:45

கோவை:கோவை மாநகராட்சியில், 'நிர்வாக நலன்' கருதி என கூறி, நகரமைப்பு, பொறியியல், சுகாதாரப் பிரிவு மற்றும் வருவாய் பிரிவில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள், மண்டலம் விட்டு மண்டலம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை மாநகராட்சில், பொதுப்பிரிவு, பொறியியல், சுகாதாரம், நகரமைப்பு, வருவாய் என பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. நகரமைப்பு அலுவலராக பணிபுரிந்த ரவிச்சந்திரன், கடந்த, ஆக., 6ம் தேதி, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மேற்கு மண்டல நிர்வாக பொறியாளராக நியமிக்கப்பட்டார். நகரமைப்பு அலுவலராக சசிப்பிரியா நியமிக்கப்பட்டார். மூன்று மாதத்துக்கு பின், மீண்டும் நகரமைப்பு அலுவலராக ரவிச்சந்திரனே நியமிக்கப்பட்டு உள்ளார்.


மத்திய மண்டல நிர்வாக பொறியாளராக சசிப்பிரியா மாற்றப்பட்டுள்ளார்.மண்டலம் விட்டு மண்டலம்வடக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலராக இருந்த செந்தில் பாஸ்கர், மீண்டும் மத்திய மண்டலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மண்டலத்தில் பணிபுரிந்த மனோகரன், சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தால், அப்பதவி காலியாக இருந்தது. அதற்கு உதவி பொறியாளர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


சில மாதங்களுக்கு முன், ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவுக்கு மாற்றப்பட்ட ஜெயலட்சுமிக்கு, மீண்டும் வடக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.பதவி உயர்வும் புகாரும்மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனராக பணிபுரிந்த ஆனந்திக்கு சமீபத்தில் கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டு, மேற்கு மண்டலத்தில் உதவி வருவாய் அலுவலர் பதவி கொடுக்கப்பட்டது.


பல்வேறு புகார் வந்ததால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு துறை மாநகராட்சிக்கு பரிந்துரைத்தது. அதனால், மாநகராட்சி பிரதான அலுவலக பொதுப்பிரிவு கண்காணிப்பாளர் பணிக்கு மாற்றப்பட்டார். இப்பொறுப்பில் இருந்த மதுசூதனன் மேற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டார்.விடுவிப்பு, மாற்றம்பொது சுகாதாரப்பிரிவில், வடக்கு மண்டல சுகாதார அலுவலராக இருந்த திருமால், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். கிழக்கு மண்டலத்துக்கு, சுகாதார ஆய்வாளர் சந்திரனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், உணவு பாதுகாப்பு துறையில் இருந்து சமீபத்தில் மாநகராட்சிக்கு மாறுதலாகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.நிர்வாக நலன் கருதி, இத்தகைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


அதிகாரிகள் அடிக்கடி இட மாற்றம் செய்யப்படுவது, மாநகராட்சி வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பியிருக்கிறது.ஒருவருக்கு மூன்று பதவிமேற்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளர் சரவணக்குமாருக்கு, இதே மண்டலத்துக்கு நிர்வாக பொறியாளர், ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவுக்கு நிர்வாக பொறியாளர் என கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரே நபருக்கு மூன்று பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் என, இரண்டு மண்டலங்களை, நிர்வாக பொறியாளர் ஞானவேல் கவனித்து வந்தார். அதில், மத்திய மண்டல பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X