| மானாமதுரையில் சுகாதாரப்பணி Dinamalar
மானாமதுரையில் சுகாதாரப்பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2019
01:56

மானாமதுரை : மானாமதுரை மருதுபதி நகரில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வந்ததன் எதிரொலியாக பேரூராட்சி மற்றும் சுகாதார துறையினர் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.




மானாமதுரை மருதுபதி நகரில் போதுமான கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் ஆங்காங்கே மழைநீர் தேங்குவதாலும்,பன்றிகள் சுற்றி திரிவதாலும் கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் மர்ம காய்ச்சலால் 25க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மானாமதுரை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளிவந்தது.இதனையடுத்து மானாமதுரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை, சுகாதார பூச்சியியல் வல்லுநர் இறையரசி,சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை மற்றும் டெங்கு களப்பணியாளர்கள் வீடு,வீடாகச் சென்று சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X