காரைக்குடி : காரைக்குடி என்.ஜி.ஓ., காலனி மக்கள் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தும்நடவடிக்கை இல்லாததால்,நேற்று சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் 500க்கும்மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள சாலை, எக்ஸ்சர்வீஸ்மேன் காலனி, ஓ.ஏ., காலனி பகுதிகளை இணைக்கும் முக்கியச் சாலையாக உள்ளது. கடந்த 8வருடங்களுக்கும் மேலாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையில், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் கூட செல்ல முடியவில்லை. மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.சகதிக்காடாகமாறிக்கிடக்கும் இச்சாலை குறித்து புகார் அளித்தும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. என்.ஜி.ஓ., காலனி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.