| அரசுப்பள்ளி அருகே ஆபத்தான மின் மாற்றி புகார் கொடுத்தும் அதிகாரிகள் மெத்தனம்  Dinamalar
அரசுப்பள்ளி அருகே ஆபத்தான மின் மாற்றி புகார் கொடுத்தும் அதிகாரிகள் மெத்தனம் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2019
02:05

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பட்டினம்காத்தான் ஊராட்சி பிள்ளையார் கோயில் அருகே மண்டபம் ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளி உள்ளது.




இதில் நுாறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.பள்ளி சுற்றுச்சுவர் அருகே உள்ள மின் மாற்றியில் அடிக்கடி அதிக சத்தத்துடன் தீப்பொறி பறந்து மாணவர்களை அச்சுறுத்துகிறது. அருகில் உள்ள வேப்ப மரக்கிளைகள் படும் போதும், மழைநேரங்களில் மின் கசிவு காரணமாக அடிக்கடி தீப்பொறி ஏற்படுகிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.சில நேரங்களில் காகம் போன்ற பறவைகள் அமரும் போது மின்சாரம் தாக்கி தீப்பொறி ஏற்படுகிறது. பறவைகள் பலியாகின்றன.




மின் மாற்றிக்கு அருகிலேயே உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கிறது. மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கும் நிலை உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் மின் வாரிய அமைச்சர் வேலுமணி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ., கருணாஸ், மின் வாரிய அதிகாரிகள், கலெக்டர் வீரராகவராவ் உட்பட அனைவருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளனர்.புகார் மனு அடிப்படையில் 6 மாதங்களுக்கு முன்பு மின் வாரிய உதவி பொறியாளர் விசாரித்தார். விரைவில் வேறு இடம் பார்ப்பதாகவும், மாற்றம் செய்யப்படும், என தெரிவித்தார். இன்று வரை மின் மாற்றியை மாற்றி அமைக்கவில்லை. விபரீதம் நடக்கும் முன் இந்த மின் மாற்றியை மாற்றியமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X