வடமதுரை : வடமதுரையில் கலைமகள் மேல்நிலைப்பள்ளி, பேரூராட்சி நிர்வாகம் இணைந்து உலக கழிவறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமை வகித்தார். தாளாளர் பெருமாள் துவக்கி வைத்தார். இளநிலை உதவியாளர் அழகர்சாமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குப்பாச்சி, இயக்குனர் அருள்மணி, தலைமை ஆசிரியர் இராமு பங்கேற்றனர். வீடுகள் தோறும் கழிவறை அமைப்பதன் அவசியம் குறித்த பதாதைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். நிலக்கோட்டை:
சைல்டு வாய்ஸ் நிறுவனர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மதுரை விடியல் குழந்தைகள் இயக்க பிரதிநிதிகள் துவக்கி வைத்தனர்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தவிர்த்தல், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்தல் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நிலக்கோட்டை ஒன்றிய அளவிலான வளரிளம் பெண்கள், குழு பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டமைப்பு தலைவர் இந்திராணி நன்றி கூறினார்.