சின்னமனுார் : ஹைவேவிசில் இருந்து மகாராஜா மெட்டு வரையுள்ள ரோடு விரிவாக்க பணியால் 5 மலைக்கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு,மகாராஜா மெட்டு, வெண்ணியாறு ஆகிய 5 மலைக்கிராமங்களை உள்ளடக்கியது ஹைவேவிஸ் பேரூராட்சி. இந்த மலைக் கிராமங்களுக்கு சின்னமனுாரிலிருந்து ரோடு வசதியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் சின்னமனுார் வனச்சரக அலுவலகம் முதல் ஹைவேவிஸ் வரை உள்ள 25 கி.மீ., ரோடு, ரூ. 89 கோடி செலவில் அகலப்படுத்தி அமைக்கப்பட்டது. அங்கிருந்து மகாராஜா மெட்டு வரையுள்ள 10 கி.மீ., துாரத்திற்கு ரோடு, ரூ. 20 கோடி மதிப்பில் அகலப்படுத்தி அமைக்கும் பணிசில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
மணலாறிலிருந்து மகாராஜா மெட்டு வரை தரையை சமன்படுத்தும் பணிக்காக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 5 மலைக்கிராம மக்கள் வாகனங்களை பயன்படுத்த முடியாமல் நடந்து செல்லும் நிலையுள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் துவங்கி விட்டதால் தரை சேறும், சகதியுமாக மாறி விட்டது. ரோடு பணியை விரைவு படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.