| டிரைவர் கொலை: நண்பர்கள் கைது Dinamalar
டிரைவர் கொலை: நண்பர்கள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2019
02:57

உத்தமபாளையம் : தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே மண் அள்ளும் இயந்திர டிரைவர் முகம் சிதைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.



உத்தமபாளையம் அருகே உ.அம்பாசமுத்திரம் மூக்கன் மகன் ராஜேஷ் 27. இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் மண் அள்ளும் இயந்திர டிரைவராக இருந்தார். நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு நண்பர்களுடன் சேர்ந்து, உ.புதுாரில் மது குடித்தார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ராஜேைஷ, நண்பர்கள் பாட்டிலால் குத்தினர். முகம் முற்றிலும் சிதைக்கப்பட்டது. இதில் அவர் இறந்தார்.



இக்கொலை தொடர்பாக உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் செல்வக்குமார் 22, பொம்மையனை 22 , கைது செய்தனர். சாலை மறியல்: இந்த கொலையை கண்டித்தும், தொடர்புடைய வேறு சிலரை கைது செய்ய வலியுறுத்தியும், ராஜேஷ் உறவினர்கள், கிராமத்தினர் இங்கு பைபாஸ் ரோட்டில் காலை 9:30 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., சின்னகண்ணு தலைமையிலான போலீசார் சமாதானம் செய்தும் ஏற்காததால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பேச்சுவார்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.



என்ன காரணம் போலீசார் கூறியதாவது: கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பொம்மையனின் தங்கை பிரிந்து வாழ்கிறார். அவருக்கு செல்வக்குமாருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பொம்மையன் முடிவு செய்துள்ளார். மதுபோதையில் 'தங்கையை எனக்கு திருமணம் செய்து வை' என ராஜேஷ் அவதுாறாக கூறவே, ஆத்திரத்தில் பொம்மையன், செல்வக்குமார் அவரை மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்தனர், என்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X