ரூ.78.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
04:21

சென்னை : கார் மற்றும் லாரி டிரைவர்களின் அஜாக்கிரதையால், விபத்தில் இறந்த இளைஞரின் பெற்றோருக்கு, 78.65 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.



ஆந்திராவைச் சேர்ந்த வர்கள், வெங்கட சுப்பாராவ், நாகராஜம்மா. இவர்களது மகன், வெங்கட சத்யா நாராயணா, 26. இவர், சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில், மூத்த இன்ஜினியராக பணியாற்றினார்.இவர், 2015 மார்ச், 21ம் தேதி, ரேடியல் சாலையில், துரைப்பாக்கம் நோக்கி, மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, இவருக்கு முன், குப்பை கழிவுகளை கொட்டியவாறு, குப்பை லாரி சென்றுள்ளது. கழிவால் பைக்சறுக்கியதில், நிலைதடுமாறிய சத்யா கீழே விழுந்தார். அப்போது பின்புறம் வேகமாக வந்த, டொயோட்டா கார், சத்யா மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட சத்யா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



தங்கள் மகனின் இறப்புக்கு, 1.82 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சத்யாவின் பெற்றோர், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.நீதிபதி எஸ்.உமாமகேஸ்வரி முன், இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, 'கார் சரியான வழியில் தான் சென்றது. லாரியின் ஓட்டுனரும், மனுதாரரின் மகனும் தான், விபத்துக்கு காரணம்' என, கார் காப்பீட்டு நிறுவனமான, 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனம் வாதிட்டது.



'மனுதாரர் மகன் ஓட்டிய மோட்டார் சைக்கிளின் முன், லாரி சென்றது. மோட்டார் சைக்கிளை லாரி தொடக்கூட இல்லை. எனவே, இதற்கும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது' என, லாரி காப்பீட்டு நிறுவனமான, 'பாரதி ஆக்ஸா இன்சூரன்ஸ்' நிறுவனம் வாதிட்டது.



விசாரணைக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: விசாரணையில், கார் மற்றும் லாரியின் டிரைவர்கள், கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் வாகனங்களை இயக்கியதே, காரணம் என்பது தெளிவாக தெரிகிறது. குப்பை லாரி, அஜாக்கிரதையாக, குப்பை எடுத்து சென்றுள்ளது. அதனால், லாரியில் இருந்து வாழைத் தண்டு கீழே விழுந்துள்ளது. அதில், மனுதாரரின் மகன் வழுக்கி கீழே விழுந்துள்ளார்.



டொயோட்டா கார், மனுதாரர் மகன் பைக்கின் பின் சென்றுள்ளது. போதிய இடைவெளி விடாமல் பின் தொடர்ந்ததால், உடனடியாக அவரால் காரை நிறுத்த முடியவில்லை; விபத்தையும் தடுக்க முடியவில்லை. அதனால், டிரைவர்கள் இருவருமே, இந்த விபத்துக்கு காரணம். மனுதாரர் மகனின் இறப்புக்கு இழப்பீடாக, 78.65 லட்சம் ரூபாயை, இரண்டு காப்பீட்டு நிறுவனங்களும் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X