வடிகால் மூடியால் விபத்து அபாயம் | சென்னை செய்திகள் | Dinamalar
வடிகால் மூடியால் விபத்து அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2019
04:42

தரமணி : சேதமடைந்த கழிவு நீர் வடிகால் மூடியால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.



அடையாறு மண்டலம், 180வது வார்டு, தரமணி, அண்ணா நகர் சாலை, 40 அடி அகலம் கொண்டது.வேளச்சேரியில் இருந்து திருவான்மியூர், அடையாறு செல்வோர், இந்த சாலையை பயன்படுத்துவதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையின் மைய பகுதியில், நான்கு இடங்களில் கழிவு நீர் வடிகால் மூடி சேதமடைந்துள்ளது. ஆறு மாதத்திற்கு முன் தான், புதிய மூடி போடப்பட்டது. தரம் குறைந்த மூடி போட்டதால், ஆறு மாதத்தில் சேதமடைந்ததாக பகுதிமக்கள் குற்றஞ்சாட்டினர்.



சேதமடைந்த மூடியை மாற்றி, தரமுள்ள மூடி அமைக்க வலியுறுத்தியும், குடிநீர் வாரியம் அலட்சியமாக உள்ளது.இதேபோல், 177, 174 ஆகிய வார்டுகளில், சில இடங்களில், கழிவு நீர் மூடி சேதமடைந்து காணப்படுகிறது.ஆபத்தை உணர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மூடியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X