காதலுக்கு எதிர்ப்பு: மகளுக்கு தீ வைப்பு | நாகப்பட்டினம் செய்திகள் | Dinamalar
காதலுக்கு எதிர்ப்பு: மகளுக்கு தீ வைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2019
06:43

நாகப்பட்டினம்: நாகை அருகே, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த தாயும் தீக்குளித்தார்.


நாகை மாவட்டம், திட்டச்சேரி அடுத்த வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 57; தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி, 48. இவர்களுக்கு, 17 வயது மகளும், 16 வயதில் மகனும் உள்ளனர்.அவர்களது மகள், பிளஸ் 1 படித்து வருகிறார். அவர், அதே பகுதியை சேர்ந்த, 22 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். அதையறிந்த பெற்றோர், மகளை கண்டித்துள்ளனர். காதல் ஜோடி இருவரும், இரு முறை, தங்களது வீட்டில் இருந்து வெளியேறி, வெளியூரில் தங்கியுள்ளனர். உமா மகேஸ்வரி அங்கு சென்று, தன் மகளை, திரும்ப அழைத்து வந்து, வீட்டில் தங்க வைத்தார்.காதல் விவகாரம் தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு, உமா மகேஸ்வரிக்கும், அவரது மகளுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், உமா மகேஸ்வரி, மகளின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து, தானும் தீ வைத்துக் கொண்டார்.இருவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு, நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இருவருக்கும், தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் இருவரிடமும், நாகை மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி வாக்குமூலம் பெற்றார். திட்டச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


 

Advertisement
மேலும் நாகப்பட்டினம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X