| பெண்ணுக்கு கத்திக்குத்து: இருவர் கைது Dinamalar
பெண்ணுக்கு கத்திக்குத்து: இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2019
23:38

திருவாடானை : வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


திருவாடானை அருகே கப்பகுடியை சேர்ந்தவர் தங்கம்மாள் 40. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும் தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டது. இதில் தங்கம்மாளை ஐந்து பேர் சேர்ந்து தாக்கி கத்தியால் குத்தினர். தங்கம்மாள் புகாரில் திருவாடானை போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி 50, ச.சுப்பிர மணி 60, ஆகிய இருவரையும் கைது செய்தனர். சங்கர், ராஜா, பிரபு ஆகியோரை தேடி வருகின்றனர். மூலவயல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி 40. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த குப்பு 57, என்பவருக்கும் நாற்று நடுவதில் தகராறு ஏற்பட்டு தாக்கப்பட்டார்.குப்புவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X