சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம்: நவ.26ல் நடக்கிறது | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம்: நவ.26ல் நடக்கிறது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2019
23:39

ராமநாதபுரம் : சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான பொதுமக்களின் குறைதீர் கூட்டம் நவ.,26ல் நடக்கிறது.பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடன் நவ.,26 மாலை 4:00 மணிக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது.இக்கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம், என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X