| 3 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்டது பாலபச்சனுார் Dinamalar
3 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்டது பாலபச்சனுார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 நவ
2019
01:22

கோவை : மண்டல அளவில், வேளாண் கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





கோவை வேளாண் பல்கலை சார்பில், மாணவ, மாணவியரை விளையாட்டு துறையில் ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள வேளாண் கல்லுாரிகள், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலம்-1ல் இடம் பெற்றுள்ள வேளாண் கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கோவை வேளாண் பல்கலை மைதானத்தில் நேற்று நடந்தது.




மதுரை வேளாண் கல்லுாரி அணி, பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி அணிகள் மோதின. முதலில் விளையாடிய மதுரை அணி, 12 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 66 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி, 11 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 69 ரன் எடுத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.* இரண்டாவது போட்டியில், புதுக்கோட்டை குடிமியன்மலை வேளாண் கல்லுாரி அணி, திருவண்ணாமலை பாலபச்சனுார் வேளாண் கல்லுாரி அணிகள் மோதின.




முதலில் விளையாடிய புதுக்கோட்டை குடிமியன்மலை வேளாண் கல்லுாரி அணி, 12 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 84 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய பாலபச்சனுார் வேளாண் கல்லுாரி அணி, 12 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 81 ரன் மட்டுமே எடுத்தது. புதுக்கோட்டை குடிமியன்மலை வேளாண் கல்லுாரி அணி, மூன்று ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X