| ஐ.நா., அதிகாரிகளுடன் சத்குரு ஆலோசனை Dinamalar
ஐ.நா., அதிகாரிகளுடன் சத்குரு ஆலோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 நவ
2019
01:22

கோவை : காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்டங்கள் மற்றும் உலகின் சுற்றுச்சூழல் பிரச்னை தொடர்பாக, ஐ.நா., அதிகாரிகளுடன், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார்.




சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக, ஈஷா அறக்கட்டளை பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, நிலம் பாலைவனமாதலை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பு, ஈஷா அறக்கட்டளைக்கு, சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியது. ஜெர்மனி, பான் நகரில் உள்ள அவ்வமைப்பின் தலைமையகத்துக்கு, சத்குரு சென்றார். அவருக்கு ஐ.நா., அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.நிலம் பாலைவனமாதலை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பு, யு.என்.சி.சி.டி., நிர்வாக செயலாளர் இப்ராஹிம் தியாவ் உடன், சத்குரு கலந்துரையாடினார்.



பூமியின் இயற்கை வளங்களை பாதுகாப்பது, நிலம், நீரை பாதுகாப்பதில் மனித குலத்தின் பொறுப்பு பற்றி பேசினர். காவேரி நதிக்கு புத்துயிரூட்ட துவங்கியுள்ள, 'காவேரி கூக்குரல்' இயக்கப் பணிகளை, சத்குரு விளக்கினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X