| சகோதயா தடகளம்; சுபின் சூப்பர் Dinamalar
சகோதயா தடகளம்; சுபின் சூப்பர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 நவ
2019
01:23

கோவை : கோயம்புத்துார் சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி, 800மீ., ஓட்டத்தில், சுபின் முதலிடம் பிடித்து அசத்தினார்.கோயம்புத்துார் சகோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ் மற்றும் ஸ்ரீசக்தி சர்வதேச பள்ளி இணைந்து நடத்தும், 42வது சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டி, பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.




12, 14, 16, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுக்கு உட்பட்ட, 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1,500மீ., குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடந்தது.மேட்டுப்பாளையம், அவிநாசி, திருப்பூர், ஈரோடு, கோபி, கோவை, உடுமலை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.




கோயம்புத்துார் சகோதயா அமைப்பு தலைவர் நவமணி, ஸ்ரீசக்தி சர்வதேச பள்ளி துணை தலைவர் தீபன் தங்கவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நேற்று நடந்த போட்டி முடிவில், மாணவர்கள் பிரிவு, 19 வயதுக்கு உட்பட்ட, 1,500மீ., ஓட்டத்தில் சஞ்சய், ரிஷிவர்மா, ஸ்ரீ; 16 வயது பிரிவு 800மீ., சுபின், சுதன்சு, லோகேஷ்; 19 வயது பிரிவு மும்முறை தாண்டுதலில், சஞ்சுவக் ஷினி, குருஅக் ஷயா, நாது வர்ஷினி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.



மாணவியர் பிரிவு, 16 வயதுக்கு உட்பட்ட 800மீ., சுபிக்கா, சுவதிகோ, தீர்தா; 19 வயது பிரிவு வேதாரஷினி, பூஜாஸ்ரீ, யுவஸ்ரீ ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் பாஸ்கரன் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X