ஆலந்துார்:குடிபோதையில், தகாத வார்த்தைகளால் திட்டியதால், தாய் மாமனை அடித்துக் கொன்றவரை, போலீசார் கைது செய்தனர்.
ஆலந்துார், ஆசர்கானா தெருவைச் சேர்ந்தவர் எத்திராஜ், 60. இவரின் சகோதரி சரஸ்வதி. அதே தெருவில் வசித்து வருகிறார். எத்திராஜுக்கு குடிப்பழக்கம் உண்டு.தினமும் மது அருந்தி, சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு குடித்துவிட்டு, சரஸ்வதி குடும்பத்தாரை, எத்திராஜ் தகாத வார்த்தைகளால் திட்டினார்.ஆத்திரமடைந்த சரஸ்வதியின் மகன் கோகுல்ராஜ், 31, தாய் மாமனை அடிக்க விரட்டினார். தப்பிய எத்திராஜ், முத்தம் ஜி -இப்ராஹிம் தெரு சந்திப்பில் தவறி விழுந்தார். அங்கு கருங்கல்லால், எத்திராஜின் முகத்தை கோகுல்ராஜ் தாக்கியதில், அவர் இறந்தார். பரங்கிமலை போலீசார், கோகுல்ராஜை கைது செய்தனர்.