அனுமதியற்ற கேபிள் தடங்களால் ரூ.55 கோடி இழப்பு: களத்தில் இறங்கிய சென்னை மாநகராட்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 நவ
2019
17:51
பதிவு செய்த நாள்
நவ 21,2019 02:00

சென்னை:சென்னையில், 25 நிறுவனங்கள், கேபிள் தடங்களை, அனுமதியற்ற நிலையில் அமைத்துள்ளன. இதன் வாயிலாக மாநகராட்சிக்கு, ஆண்டிற்கு, 55 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.



சென்னை மாநகராட்சியில், தனியார் நிறுவனங்களில், தொலைபேசி, தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் கண்ணாடி இழை கேபிள்கள் அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன. பி.எஸ்.என்.எல்.,இந்த கேபிள்கள் அமைக்க, சென்னை மாநக ராட்சியிடம் அனுமதி பெற்று, ஆண்டுதோறும், தட வாடகை செலுத்த வேண்டும்.மேலும், கேபிள்கள் அமைக்கும் போது, பொதுமக்களுக்கும், மாநகராட்சியின் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பொது சொத்திற்கும் பாதிப்புஏற்படாத வகையில் அமைக்க வேண்டும். ஆனால், பல்வேறு இடங்களில், மாநகராட்சி அனுமதி பெறாமல்,தனியார் நிறுவனங்களின் கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேபிள்களை முறைப்படுத்த, கமிஷனர் பிரகாஷ் உத்தரவிட்டார்.


அதன்படி, மாநகராட்சி எல்லையில், வார்டு வாரியாக உள்ள அனைத்து சாலைகள் மற்றும் தெருக்களில், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், தரைக்கு அடியில் மற்றும் தரைக்கு மேல் செல்லும் கேபிள்கள், தனித்தனியாககண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, 27 நிறுவனங்கள், சென்னையில் தங்கள் நிறுவன கேபிள்களை அமைத்துள்ளனர். இதில், அண்ணாபல்கலை உட்பட இரண்டு நிறுவனங்கள் மட்டுமே, தங்களது கேபிள் தடங்களை, அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தி வருகின்றன.


பி.எஸ்.என்.எல்., ஆதார் டிஜிட்டல், பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் உட்பட, 25 நிறுனவங்கள், மாநகராட்சி அனுமதித்த கி.மீ., நீளத்தை தாண்டி, கேபிள் தடங்களைஅமைத்துள்ளன.இதில், பி.எஸ்.என்.எல்., 10 கோடி ரூபாய்; தமிழக அரசு கேபிள், 12 கோடி ரூபாய் என, 55 கோடியே, 98 லட்சத்து, 66 ஆயிரத்து, 155 ரூபாயை, 24 நிறுவனங்கள், மாநக ராட்சிக்கு தடவாடகை பாக்கி வைத்துள்ளன. இதன் வாயிலாக,மாநகராட்சிக்கு ஆண்டு தோறும், 55 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது.


வழக்கு பதிவு


இதுகுறித்து, மாநகரட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில், 1 கி.மீ., கேபிள் தடத்திற்கு, ஆண்டிற்கு, 52 ஆயிரத்து, 261 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 19.50 கோடி ரூபாய் வசூலாகிறது. தற்போது வரை, கேபிள் தட வாடகை, 55.98 கோடி ரூபாய் பாக்கி செலுத்தும் படி, அனைத்து நிறுவனங்களுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களில், பாக்கி தொகையை செலுத்தவில்லை என்றால், கேபிள் தடங்கள் துண்டித்து அகற்றப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்து, சட்ட ரீதியில், பாக்கி தொகை வசூலிக்கப்படும்.இவ்வாறு-, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
21-நவ-201918:21:10 IST Report Abuse
தமிழ் மைந்தன் திருட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதா? இல்லையா......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X