| 10 ரவுடிகளுக்கு, 'குண்டாஸ் Dinamalar
10 ரவுடிகளுக்கு, 'குண்டாஸ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 நவ
2019
02:05

'வேப்பேரி: ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 32. இவர் மீது, கொலை உட்பட, 80 வழக்குகள் உள்ளன. அதேபோல, தேனாம்பேட்டை, எஸ்.எம்.நகரைச் சேர்ந்த செல்வகுமார், 33, மீது, கொலை வழக்குஉள்ளது. பள்ளிக்கரணை கோபிநாத், 31, மீது, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.அண்ணா நகர் கணேஷ், 28, மீது, கஞ்சா விற்ற வழக்கு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் பால்மாயாண்டி, 30, மற்றும் செங்குன்றம்சேதுபதி, 25, ஆகியோர் மீது, நான்கு கொலை வழக்குகள் உள்ளன. ரவுடிகளான இவர்கள் உட்பட, 10 பேரை, கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தர வின்படி, போலீசார் நேற்று, குண்டர்சட்டத்தில் கைது செய்தனர்.


ஸ்டான்லியில் செயின் பறிக்க முயற்சி


ராயபுரம்: ராயபுரம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், மருந்தாளுனராக பணிபுரிபவர் விஜயலட்சுமி, 56. நேற்று காலை, மருந்து வாங்க, முகமூடி அணிந்தபடி வந்த இருவர்,கத்தியை காட்டி மிரட்டி, செயின் பறிக்கமுயன்றனர். விஜயலட்சுமி கூச்சலிட்டதால், இருவரும் தப்பினர். ஸ்டான்லி மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.


கஞ்சா விற்ற ஐந்து பேர் அகப்பட்டனர்


பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை, வரதராஜபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், 31, என்பவர்,பள்ளிக்கரணை போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வடபழனி: வடபழனி போலீசார் நேற்று முன்தினம் இரவு, கங்கையம்மன் கோவில் தெரு - ஆற்காடு சாலை சந்திப்பில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, அகஸ்டீன், 23, முத்துகுமார், 25, ஆகியோர் சிக்கினர். 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. துரைப்பாக்கம்: பெருங்குடி, கல்லுக்குட்டையைச் சேர்ந்த சரவணன், 28, கமல், 36. இருவரும், அப்பகுதியில் கஞ்சா விற்றனர். இவர்களை துரைப்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


6 சவரன் செயின், 'அபேஸ்'


அபிராமபுரம்: அடையாறு, கிரஸன்ட் அவென்யூவைச் சேர்ந்தவர், தர்ஷினி, 28; பிரபல ஜவுளி கடை உரிமையாளரின் மகள். சில தினங்களுக்கு முன், மேஜையில் வைத்திருந்த, 6 சவரன் தாலி செயின் காணாமல் போயுள்ளது. தர்ஷினியின் கணவர் சிவா, 30, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், தர்ஷினி வீட்டு வேலைக்கார பெண்ணிடம் விசாரிக்கின்றனர்.


காவலரை மிரட்டிய பெண் கைது


ஆலந்துார்: ஆலந்துார், காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் உமா மகேஷ்வரி, 37; காவலர். இவரது கணவர் டில்லிபாபு, 39, என்பவரும், காவல ராக பணிபுரிந்து, பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளாகி, பணி நீக்கம் செய்யப்பட்டார். டில்லிபாபுவுக்கும், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதேவி, 39, என்பவருக்கும், கள்ளத்தொடர்பு இருந்தது.இதை கண்டித்ததால், உமா மகேஷ்வரியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். புகாரையடுத்து, நவ., 1ம் தேதி, டில்லி பாபு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பதாக, உமாமகேஷ்வரிக்கு ஸ்ரீதேவி மிரட்டல் விடுத்தார். இவரை, பரங்கிமலை மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.


பூ வியாபாரி வீட்டில் திருட்டு


ஐஸ்ஹவுஸ்: ராயப்பேட்டை, பேகம் முதல் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 52; பூ வியாபாரி. இவர், நேற்று முன்தினம் இரவு, குடும்பத்துடன் ஜாம்பஜாரில் நடந்த உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றார். இரவு, 11:00 மணியளவில் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 6 சவரன் நகை, 4,000 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.


செயின் பறித்தவர் சிக்கினார்


பாண்டிபஜார்: தி.நகர், பெரியார் சாலையைச் சேர்ந்தவர், ஜோதி, 70. நேற்று முன்தினம் காலை, வீட்டில் தனியாக இருந்த ஜோதியை, குமார், 50, என்பவர் தாக்கி, 4 சவரன் செயினை பறித்துச் சென்றார். பாண்டிபஜார் போலீசார் நேற்று குமாரை கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.


நகை, லேப் - டாப், ஆட்டை


வேளச்சேரி: வேளச்சேரி, ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் நல்லசிவம், 28; தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, கடைக்கு சென்றபோது, வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், 5 சவரன் நகை, 2 லேப் - டாப் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் திருடி சென்றர். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


லாரியுடன் 27 டன் அரிசி கடத்தல்


திருவொற்றியூர்: திருவொற்றியூர், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர், மாரிமுத்து; லாரி உரிமையாளர். பேசின் சாலையில் உள்ள, மத்திய அரசு சேமிப்பு கிடங்கில் இறக்குமதியான, 27 டன் எடையிலான, 1,080 பிரியாணி அரிசி மூட்டைகள், இவருக்கு சொந்தமான, டாரஸ் லாரியில் ஏற்றப்பட்டன.நேற்று முன்தினம் இரவு, பூந்தமல்லியில் உள்ள அரிசி கடை ஒன்றிற்கு கொண்டு செல்லவிருந்தது. லாரியின் ஓட்டுனர் கே.கே.சாமி, லாரியை ஓட்டிச் சென்று தலைமறைவானார். ஓட்டுனர் வேலைக்கு சேர்ந்து, 10 நாட்களே ஆகிறது. அவர் தொடர்பு எண்ணுமில்லை. அதிர்ச்சியடைந்த மாரிமுத்து, திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை


கானத்துார்: இ.சி.ஆர்., கானத்துாரில் முகமது அப்னத், 45, என்பவர், துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, பார்த்த போது, கடையின் பூட்டை உடைத்து, 50 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது.அதே பகுதியில், ரவி, 50, என்பவரின் மளிகை கடையின் பூட்டை உடைத்து, 5,000 ரூபாய் திருடப்பட்டது. கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்
பொழுது போக்கு


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X