| ரத்னா சென்டரில் மூளைக்கு பயிற்சி Dinamalar
ரத்னா சென்டரில் மூளைக்கு பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 நவ
2019
02:06

சென்னை:சென்னை, ராயப்பேட்டை, பாலாஜி நகரில் செயல்படும், 'ரத்னா சென்டர் பார் கான்ஷியஸ் லிவிங்' நிறுவனம் சார்பில், மூளையை முழுவதுமாக பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது.


இது குறித்து, அந்நிறுவன நிறுவனரும், மனநல மருத்துவருமான, ஜி.எல்.சம்பூர்ணா கூறியதாவது:பலரும், தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைக்க, உடற்பயிற்சி நிலையங்களுக்கும்; மனதை, ஒரு நிலைப்படுத்த, யோகா வகுப்புக்கும் செல்கின்றனர். மூளையின் செயல்பாட்டை, பலர் முழுவதுமாக பயன்படுத்தாமல் உள்ளனர்.மூளைக்கு தினமும் பயிற்சி அளிப்பதன் வாயிலாக, அதை முழுவதுமாக பயன்படுத்தலாம். இதனால், எந்த செயலையும், தன்னம்பிக்கையுடன் செய்யலாம். எங்கள் நிறுவனத்தில், 22, 23ம் தேதிகளில், சிறந்த முறையில், மூளையை பயன்படுத்துவது தொடர்பாக, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.காலை, 6:15 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, ஒரு வகுப்பில், ஒரு மணி நேரத்திற்கு பயிற்சி அளிக்கப்படும். அதில் பங்கேற்பதன் வாயிலாக, மூளையின் செயல்பாட்டை தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களை, 98402 30151 என்ற மொபைல் போன் எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X