| நிலக்கடலை சாகுபடி ஜோர்: கரூரில் கூவி கூவி விற்பனை Dinamalar
நிலக்கடலை சாகுபடி ஜோர்: கரூரில் கூவி கூவி விற்பனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 நவ
2019
09:32

கரூர்: கரூர் மாவட்டத்தில், நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. அறுவடை தொடங்கிய நிலையில், கரூரில் கூவி கூவி விற்கப்படுகிறது.


தமிழகத்தில் மழையை நம்பி, மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுறது. கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கரூர் மாவட்டத்தில், பரவலாக மழை பெய்தது. கரூர், தான்தோன்றிமலை, கடவூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய பகுதிகளில், 15 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அறுவடை துவங்கியுள்ளது. வழக்கமாக, நிலக்கடலையை எண்ணெய் ஆலைக்காக ஏஜன்ட்கள், விவசாயிகளை நேரிடையாக சந்தித்து கொள்முதல் செய்வர். நடப்பாண்டில் மாநிலம் முழுவதும், நிலக்கடலை நல்ல விளைச்சல் உள்ளதால், விவசாயிகளே நேரிடையாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். கரூர் உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், கிராம சந்தைகள் மற்றும் தெருவோரப் பகுதிகளில், மண் நீக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட நிலக்கடலை விற்பனை செய்யப்படுகிறது.


இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் ஆலைக்கான ஏஜன்ட்கள் நிலக்கடலை கேட்டு அதிகம் வரவில்லை. ஒரு சிலர் வந்தாலும், ஒரு படி, 15 முதல், 20 ரூபாய் வரை குறைந்த விலைக்கு கேட்கின்றனர். இதனால், பொதுமக்களிடம் நேரிடையாக விற்பனை செய்யும்போது, 20 முதல், 30 ரூபாய் வரை கிடைக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X