மா.திறனாளிக்கு கருணை காட்டிய கலெக்டர்கள்: நடவடிக்கை எடுக்க மறுக்கும் அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2019
09:33

கரூர்: மாற்றுத்திறனாளி முதியவருக்கு கருணை உள்ளத்துடன் நடவடிக்கை எடுக்க கலெக்டர்கள் உத்தரவிட்ட போதும், துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.


கரூரில், சிறப்பு மக்கள் குறைதீர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரவக்குறிச்சி தாலுகாவிற்குட்பட்ட, 1,537 பயனாளிகளுக்கு, 12.39 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி துறை சார்பில், 30 பயனாளிகளுக்கு, 29.82 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், பழுதடைந்த ஸ்கூட்டர் வழங்கியதாக, மாற்றுத்திறனாளி புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


புகார் தெரிவித்த, சேந்தமங்கலம் கிழக்கு பஞ்., குறிக்காரன்வலசு பழனிசாமி, 69, கூறியதாவது: ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்து காரணமாக, நடக்க முடியவில்லை. மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் உதவித் தொகை, நான்கு சக்கர ஸ்கூட்டர், பஸ் பாஸ் கோரி விண்ணப்பித்தேன். கலெக்டர் ஷோபனா, ஜெயந்தி, கோவிந்தராஜ் ஆகியோர் உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினர். பின்னர், அரவக்குறிச்சி மோட்டார் வாகன அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் உதவியால், எல்.எல்.ஆர்., வழங்கப்பட்டது. ஸ்கூட்டர் வந்தவுடன் டிரைவிங் லைசென்ஸ் அளிப்பதாக தெரிவித்தனர். மூன்று மாதங்களுக்கு முன், கலெக்டர் அன்பழகனிடம் மனு அளித்தேன். அவர், உடனடியாக ஸ்கூட்டர் உட்பட உதவிகளை அளிக்கும்படி உத்தரவிட்டார். இந்நிலையில், எனக்கு ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளதாக, நேற்று முன்தினம், மாற்றுத்திறனாளி அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவித்தனர். திருவள்ளுவர் மைதானத்திற்கு வந்தபோது, பழுதடைந்த பேட்டரி ஸ்கூட்டரை காட்டினர். ஆனால், பழைய ஸ்கூட்டரை சரி செய்து அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என, தகராறு செய்தேன். இதுபோல, பலருக்கு பழுதடைந்த உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதை, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


கலெக்டரின் உதவியாளர் மோகன் கூறியதாவது: பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதை ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையால், தற்போது பயன்பாட்டுக்கு உதவும் நோக்கத்தில் பழைய பேட்டரி ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இது வேண்டாம் என, அவர் கூறியதால், பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க ஏற்பாடு செய்யப்படும், அவரது, கோரிக்கை குறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X