கிருஷ்ணராயபுரம்: புணவாசிப்பட்டி, கிளை நூலகத்தில், நூலக வார விழா நடந்தது. அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் தலைமை வகித்தார். நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த, புத்தக கண்காட்சியை மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அவர்களுக்கு நூலக பயன்பாடுகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது.
* லாலாப்பேட்டை கிளை நூலகத்தில், வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் லாலாப்பேட்டை சேர்ந்த சரவணன், 1,000 ரூபாய் வழங்கி, புரவலராக இணைத்துக் கொண்டார். நூலகர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார்.
* பழையஜெயங்கொண்டம் கிளை நூலகம் சார்பில், நூலக வார விழா கொண்டாட்டம் நடந்தது. நூலகத்தில் பல்வேறு வகையான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியர், மக்கள் பார்வையிட்டனர். வார விழா நிகழ்ச்சிகளை நூலகர் சந்திரன் செய்திருந்தார்.