| இருவேறு விபத்துகளில் விவசாயி, தொழிலாளி பலி Dinamalar
இருவேறு விபத்துகளில் விவசாயி, தொழிலாளி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 நவ
2019
09:34

கரூர்: கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மலையம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிச்சை முத்து, 70; விவசாயி. நேற்று முன்தினம் மாலை, 5:30க்கு டி.வி.எஸ்., மொபட்டில், மூலிமங்கலம் பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பொலிரோ ஜீப், பிச்சைமுத்து மீது மோதியது. படுகாயமடைந்தவர், கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரவு உயிரிழந்தார்.

* வேலாயுதம்பாளையம் அருகே, மூர்த்தி பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 55; கூலித் தொழிலாளி. நேற்று முன் தினம் மாலை, 6:30க்கு டி.வி.எஸ்., மொட்டில் நாணப் பரப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அடையாளம் தெரியாத வாகனம், மொபட் மீது மோதியது. படுகாயமடைந்த ஆறுமுகம், கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X