| உடைந்த குழாய்கள், பழுதான போர்வெல்கள்: கரூர் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் Dinamalar
உடைந்த குழாய்கள், பழுதான போர்வெல்கள்: கரூர் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 நவ
2019
09:35

கரூர்: கரூரில், பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர், சாக்கடை கால்வாய் மற்றும் சாலையில் செல்கிறது. போர்வெல் குழாய்கள், சின்டெக்ஸ் டேங்குகள் சேதமடைந்துள்ளன.


கரூர் நகராட்சியில், கரூர், தான்தோன்றிமலை பழைய நகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுகிறது. பழைய இனாம் கரூர் பகுதியில், குடிநீர் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. பழைய சணப்பிரட்டியில், புதிய குடிநீர் திட்டப்பணிகள் இல்லை. பழைய திட்டமே செயல்பாட்டில் உள்ளது. ஐந்து முதல், ஏழு நாட்களுக்கு, ஒருமுறை கரூரில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நகராட்சியில் பல இடங்களில் குழாய்கள் உடைந்துள்ளன. இதனால், தண்ணீர் திறக்கப்படும் போது, சாலை மற்றும் சாக்கடை கால்வாய்களில் பல மணி நேரம் தண்ணீர் செல்கிறது. ஆர்.டி.ஓ., சாலை, தின்னப்பா கார்னர், ராமகிருஷ்ணபுரம், பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ளிட்ட பல பகுதிகளில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகிறது. ஆனால், அதை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. மேலும், 48 வார்டுகளிலும், 2011-16 வரை, 100க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைத்து, மின் மோட்டார் உதவியுடன் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. தற்போது, பல இடங்களில் போர்வெல் குழாயும் சேதம் அடைந்துள்ளது. சின்டெக்ஸ் தொட்டி உடைந்தும், திருடு போயும் உள்ளது. பல இடங்களில் மின் மோட்டார்களை காணவில்லை. ஆனால், நகராட்சி ஆணையர், பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள், எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த, மூன்று மாதங்களாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே, பழுதடைந்த போர்வெல்களை சீரமைத்து, புதிதாக சின்டெக்ஸ் தொட்டியை வைக்க வேண்டும். மேலும், உடைந்த காவிரி குடிநீர் திட்ட குழாய்களையும் சரி செய்ய வேண்டும்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X