| நுாறு நாள் வேலை தருவதில் பாரபட்சம் Dinamalar
நுாறு நாள் வேலை தருவதில் பாரபட்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 நவ
2019
23:46

மடத்துக்குளம்: ஜோத்தம்பட்டி ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குளறுபடி நடப்பதாக, புகார் தெரிவித்து, மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தை பயனாளிகள் முற்றுகையிட்டனர்.



மடத்துக்குளம் ஒன்றியத்தில், 11 ஊராட்சி உள்ளன. இங்கு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நுாற்றுக்கணக்கான பயனாளிகள் பணியாற்றுகின்றனர். ஜோத்தம்பட்டி ஊராட்சியில், இந்த திட்ட பணிகளுக்கான ஆட்கள் தேர்வில் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்தது. இந்தநிலையில், நேற்று காலை ஒன்றிய அலுவலக வளாகத்தில், 100 க்கும் மேற்பட்ட பெண் பயனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில், ஈடுபட்டனர்.அவர்கள் கூறியதாவது: ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் பட்டியலில், 300க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதிலுள்ள அனைவருக்கும் சம அளவில் வேலை வாய்ப்பு வழங்குவது இல்லை. குறிப்பிட்ட பயனாளிகளுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. மீதமுள்ளவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். இதனால், பலரும் வருவாய் இன்றி தவிக்கின்றனர். இதற்கு தீர்வாக அனைத்து பயனாளிகளுக்கும் வேலை கொடுக்கவேண்டும். இதோடு, நான்கு வாரம் நிலுவையாக உள்ள சம்பளத்தையும் வழங்கவேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், தற்போது, தனியார் விளைநிலங்களில் திட்டம், நடைமுறைப்படுத்தப்படுவதால், பணிகள் மிக குறைவாக உள்ளன. அதற்கு தகுந்த பயனாளிகள் மட்டும் தேர்வு செய்யப்படுகின்றனர். இருப்பினும், ஊராட்சியில் விசாரித்து அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காலதாமதமாக நிதி வருவதால், சம்பளம் நிலுவையாக உள்ளது,' என்றனர்.பின்னர், பி.டி.ஓ., சண்முகவதி, பயனாளிகளிடம் உறுதி வழங்கியபின், போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X