ரூ.2.25 கோடி: குளங்களை தூர் வாரி ஆழப்படுத்த அனுமதி: கை கொடுத்தது நீர்மேலாண்மை திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 நவ
2019
11:20
பதிவு செய்த நாள்
நவ 21,2019 23:55

பல்லாவரம்: பல்லாவரம் நகராட்சியில் உள்ள மூன்று குளங்களை, நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் துார் வாரி ஆழப்படுத்தும் திட்டத்திற்கு, அரசின் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.



சென்னை, பல்லாவரத்தில், ஏராளமான நீர்நிலைகள் இருந்தன. இதில், அஸ்தினாபுரம் ஏரி இருந்த தடமே இல்லாமல் மறைந்து விட்டது.பல்லாவரம் பெரிய மற்றும் திருநீர்மலை, வீரராகவன் ஏரிகளின் பெரும்பகுதி, குடியிருப்புகளாக மாறிவிட்டன. ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள, செட்டி குளமும், விரைவில் காணாமல் போய்விடும் நிலையை எட்டியுள்ளது. இன்னும் பல குளம், குட்டைகள், அரசியல்வாதிகளால், அடியோடு மறைந்து விட்டன.ஒவ்வொரு ஆண்டும், கடும் தண்ணீர் பஞ்சத்தால், பல்லாவரம் மக்கள் தவிக்கின்றனர். இதனால், எஞ்சியுள்ள நீர்நிலைகளையாவது, துார் வாரி மழைநீரை சேகரிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


இதையடுத்து, நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பால்கேணி குளம், பாப்பாத்தி குட்டை, திருவேங்கட முடையான் குட்டை ஆகியவற்றை துார் வாரி, ஆழப்படுத்த திட்டமிடப்பட்டது. நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், 2.25 கோடி ரூபாய் செலவில், மூன்று குளங்களையும் துார் வாரி ஆழப்படுத்துதல்; கரையை பலப்படுத்தி, நடைபாதை அமைத்தல்; சுற்றுச்சுவர், மின் விளக்கு, இருக்கை ஆகிய வசதிகள் அமைக்க, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கான டெண்டர் கோரப்பட்டு, பணிகளை துவக்குவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-நவ-201910:14:44 IST Report Abuse
Bhaskaran ரயில் நிலையத்தை ஒட்டிய செட்டி குளமும் அதனுடன் சேர்ந்த மண்டபமும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் மாளயதன்றுஆயிரக்கணக்கானவர்களுக்கு பயன்தருவதாக இருந்தது ஆக்கிரமிப்பாளர்கள் அப்படியே ஸ்வாஹா செய்து விட்டனர்போலும் அரசும் கண்டுக்கவில்லை இது மகா பாவம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X