ஆஹா... அற்புதம்! மரம் வளர்க்க களமிறங்கியாச்சு! பசுமை சாலை உருவாக்க தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2019
00:00

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளில், இரண்டாயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.



பொள்ளாச்சி - மீன்கரை, பொள்ளாச்சி - வால்பாறை, ஆனைமலை - உடுமலை ரோட்டோரங்களில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆயிரக்கணக்கான மரங்கள் பராமரிக்கப்படுகிறது. இம்மரங்கள் பறவைகளுக்கு வாழிடம் கொடுத்து, உணவு வழங்கி, வாகன ஓட்டுனர்கள் இளைப்பாற நிழல் தருகிறது.சூழலை மாசுபடுத்தும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை தன்னுள் இழுத்து, உயிர் வாழத்தேவையான ஆக்சிஜன் வாயுவை வெளியிட்டு, 'ஆக்சிஜன் பேக்டரி' போன்று மரங்கள் உள்ளன.பல வகைகளில் மனிதர்களுக்கு உதவும் மரங்கள், சமீப காலமாக அழிக்கப்படுகிறது. பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், வளர்ச்சி பணிகளுக்காக மரங்கள் வெட்டி அழிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், ரோடுகளை பசுமைச்சாலைகளாக மாற்றி, சூழலை பாதுகாக்க, நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை, சுல்தான்பேட்டை சுற்றுப்பகுதிகளில், இரண்டாயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க திட்டமிட்டு உள்ளனர்.அதற்காக பல்வேறு பகுதிகளில், ரோட்டோரங்களை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. மரக்கன்றுகள் நடவு செய்து, கால்நடைகளிடம் இருந்து பாதுகாக்க மரக்கன்றுகளை சுற்றி தடுப்பு வலை அமைக்கப்படுகிறது.வேம்பு, புங்கன், நாவல், மகிழம், புன்னை, அத்தி மரம் என பல வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.இரண்டு நாட்களுக்கு முன், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், பில்சின்னாம்பாளையம் அருகே, 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்தனர்.பொள்ளாச்சி - பல்லடம் ரோடு கள்ளிப்பட்டி பிரிவு பகுதியில், நேற்று நுாறு மரக்கன்றுகள் நடவு செய்தனர். நெடுஞ்சாலைத்துறையின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.மரக்கன்று நடுவதோடு மட்டுமின்றி, அவற்றுக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாத்து, பராமரிப்பதிலும் நெடுஞ்சாலைதுறையினர் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான், பசுமை சாலை அமைக்கும் நோக்கம் நிறைவேறும்.இரண்டாயிரம் மரக்கன்றுகள்!



நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மழை காலத்துக்கு முன் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து, சூழலை பாதுகாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், இரண்டாயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், பொள்ளாச்சி - வால்பாறை, ஆனைமலை - உடுமலை ரோட்டில், 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டிலும் நடவு செய்யப்படுகிறது.நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில், இடம் உள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். தினமும் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X