| போலீஸ் டைரி Dinamalar
போலீஸ் டைரி
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2019
23:08

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, கோனேரிகுப்பத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணன் மனைவி பவுனம்மாள், 65. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் பின்புறம் உள்ள மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, அவர் மீது மின்சாரம் பாய்ந்து, மயங்கி விழுந்தார்.குடும்பத்தினர், அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.




விபத்தில் தொழிலாளி இறப்பு



உத்திரமேரூர்: உத்திரமேரூர் தாலுகா, நல்லுாரைச் சேர்ந்தவர், சங்கர், 55; கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம், பாப்பாங்குளத்தில் வேலை முடித்து, இரவு, 9:00 மணிக்கு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.மூன்றுகண் சிறுபாலம் அருகே, எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனமும், சங்கர் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில், தலை மற்றும் மூக்கில் பலத்த காயமடைந்த சங்கர், உத்திரமேரூர் அரசு மருத்துமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தது தெரிந்தது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X