பொன்னேரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றம் சிதம்பரம் டெல்டா பகுதியில் வெள்ளப் பெருக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
02:17

சிதம்பரம்:அரியலுார் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்படுவதால், சிதம்பரம் டெல்டா பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சம்பா நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.



வடக்கிழக்கு பருவ மழை காரணமாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. நேற்றும் டெல்டாவில் லேசான மழையாக பெய்தது.கீழணையில் நீர்மட்டம் 7 அடியாக வைக்கப்பட்டு, அணைக்கு வரும் 16,000 கன அடி தண்ணீர் அப்படியே கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரி நிரம்பியதால், நேற்று 300 முதல் 500 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. பொன்னேரி தண்ணீர் வடவாற்றில் கலந்து, உள்ளூர் மழையும் சேர்ந்து வீராணம் ஏரிக்கு, 6,000 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.இதனால் வீராணம் ஏரியில் இருந்து கடந்த மூன்று நாட்களாக வெள்ளியங்கால் ஓடை, சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ்., மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியும் நிரம்பியதால், வெள்ளியங்கால் ஓடையில் நேற்று கூடுதலாக 6,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ்.,சில் 2,554 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அரியலுார் மாவட்டத்திலும் பலத்த மழை காரணமாக, பொன்னேரி நிரம்பியதால், நேற்றும் இன்றும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் வளவனேரியை கடந்து வடவாற்றில் வரும் தண்ணீர் வெள்ளியங்கால் ஓடையில் கூடுதலாக திறக்கப்படுகிறது. வெள்ளியங்கால் ஓடை வெள்ளப் பெருக்கால் கள்ளந்தோப்பு, கொளக்கொடி, சர்வராஜன் பேட்டை, திருநாரையூர், வீரநத்தம், சிறகழந்தநல்லுார் போன்ற கிராமங்களில் சாகுபடி நிலங்களில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.



வெள்ளியங்கால் ஓடை, மணவாய்க்கால் உள்ளிட்ட வடிகால் தண்ணீர் கோப்பாடி மததை அடைந்து, பழைய கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. பழைய கொள்ளிடத்தில் நேற்று 13,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், சிதம்பரம் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பழைய கொள்ளிடம் வெள்ளப் பெருக்கால் பருத்திக்குடி, வெண்ணையூர், நந்திமங்கலம் போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெல் பயிர் தணணீரில் மூழ்கியுள்ளது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X