கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் பெரியாற்று நீர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
02:55

சுற்றுச்சூழல் பாதித்து காற்று மாசுபடுவதன்மூலம் மனிதனுக்கு சுவாசக்கோளாறு, இருதயநோய், தொண்டை எரிச்சல், நெஞ்சுவலி, மூக்கடைப்பு உண்டாகிறது. நீர் மாசு காரணமாக உலகில் தினந்தோறும் 14 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் எதிரொலியாக தற்போது கல்வி நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் படிப்புகளை வழங்கி வருகின்றன. சட்டங்கள், நெறிமுறைகள், கல்வி மூன்றும் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வழிகாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், பண்ணைகள், நகர்ப்புற கழிவுகள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கலக்கின்றன. இதனால் நீரின் தரமும், அதில் வாழும் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.கூடலுார் நகராட்சியில் வெளியேறும் கழிவு நீர் முழுவதும் பெரியாற்றில் கலக்கிறது. இதனால் ஆறு மாசுபடுகிறது. இதனைத் தடுக்க கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் , வீட்டில் வளர்க்கப்படும் செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும். மரங்கள் வளர்ப்பதில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும், பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள கூடலுார் நகராட்சி நிர்வாகத்துடனும் அனைவரும் கைகோர்க்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே மாசில்லா நகரை உருவாக்க முடியும்.கடும் நடவடிக்கைசி.சரவணன், சமூக ஆர்வலர், கூடலுார்: மரங்களை அதிகம் வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடைமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டாலும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் பல நிகழ்வுகளை குறைக்க வேண்டும். கூடலுார் நகராட்சியில் திறந்த வெளிக்கழிப்பிடத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும். பாலிதீன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது எடுத்துக் கூறினாலும், அது 100 சதவீதத்தை எட்டும் வரை அபராதம் விதிப்பு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது பாலிதீன் பயன்பாடு மீண்டும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது.கழிவு மேலாண்மைஆர். ஜெயக்குமார், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகி, கூடலுார்: எப்படி வேண்டுமானாலும் பொருளாதார வளர்ச்சி அமையலாம் என்பதை மாற்றி சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சியாக, பசுமைக்கட்டடங்கள், பசுமைக்கொள்கை, தண்ணீர் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை ஆகியவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். பசுமை பொருளாதாரத்தின் முக்கிய அங்கமான 'ஜீரோ வேஸ்ட்' எனப்படும் குப்பை ஒழிப்பில் நகராட்சி தீவிரமாக ஈடுபட்டு கூடலுாரை குப்பையில்லா நகரமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X