நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
03:26

புதுச்சேரி:நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் அறிவித்துள்ளார்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையால், ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. திறந்த வெளியில் போடப்படும் பொருட்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாவதால், நோய்கள் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடன் அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும், மழைக்காலங்களில் ஈரப்பதமான சூழ்நிலையில், சளிப்பிடித்தல், பன்றி காய்ச்சல் போன்றவை பரவும் என்பதால் மக்கள் கவனமாக இருக்குமாறும், குழந்தைகளின் உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.வயிற்றுப்போக்கு சம்மந்தப்பட்ட வியாதிகள் வராமலிருக்க குடிநீரை காய்ச்சிய பிறகு குடிக்க வேண்டும், வெளியில் சென்று வீடு திரும்பினால் கை, கால்கள் மற்றும் முகம் சுத்தமாக கழுவ வேண்டும்.வடகிழக்கு பருவமழை காலத்தில் நோய் பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு போர்க்கால அடிப்படையில் மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு முழுவீச்சில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் களப்பணிக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X