உள்ளாட்சி தேர்தலை பல கட்டமாக நடத்துவதா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
03:27

புதுச்சேரி:தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், பல கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆதங்கப்பட்டார்.



கடலுாரில் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்ற தி.மு.க., தலைவர் ஸ்டாலின், புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் ஓய்வெடுத்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க., தோல்வி பயத்தால் கடந்த மூன்று ஆண்டாக உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என, காலம் கடத்தி வந்தது. தற்போது உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் அறிவுறுத்தியதால், வேறு வழியின்றி வேண்டுமேன்றே திட்டமிட்டு, யாராவது கோர்ட்டிற்கு சென்று தடையுத்தரவு பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க., அரசு, கூட்டணி வைத்துள்ள மாநில தேர்தல் ஆணையமும் ஒன்று சேர்ந்து தற்போது உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளன.தி.மு.க., மட்டுமின்றி பிற கட்சிகளும், பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என, கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். ஆனாலும் மறுவரையறை முறையாக செய்யப்படவில்லை. எஸ்.சி., எஸ்.டி., பெண்களுக்கான ஒதுக்கீடு வரையறை முழுமையாக செய்யவில்லை. இதை முறைப்படுத்திட தி.மு.க., கோர்ட்டுக்கு சென்றதே தவிர, தேர்தலை நிறுத்த வேண்டும் என்று செல்லவில்லை.ஆனால், வேண்டும் என்றே முதல்வர் மற்றும் அமைச்சர்களும் தேர்தலை நிறுத்த தி.மு.க., திட்டமிடுவதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது குறித்த வரையறை கேட்டோம். அதற்கும் அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தில் இருந்தும் பதில் வரவில்லை. நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்தை சந்தித்து பல்வேறு மனுக்கள் தந்துள்ளோம். உரிய பதில் வராததால், தற்போது கோர்ட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.தமிழகத்தில் லோக்சபா தேர்தலாக இருந்தாலும், சட்டசபை தேர்தலாக இருந்தாலும் ஒரே கட்டமாகத்தான் நடந்துள்ளது.



அதுபோல் உள்ளாட்சி தேர்தலும் ஒரே கட்டமாகத்தான் நடந்துள்ளது.ஆனால் இன்றைய அறிவிப்பில் ஊரகப்பகுதிக்கு மட்டும் நடத்தி, அடுத்து பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்போவதாக வெளியிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. இதனால் தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமியா, எடப்பாடி பழனிசாமியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.கூட்டணி கட்சியுடன் பேசி வருகிறோம், அதில் எடுக்கும் முடிவின்படி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எப்படி அணுகுவது என பேசி முடிவு எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கின் மீதான விசாரணை வரும் 5ம் தேதி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வர உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துவதற்கான நடவடிக்கையை தி.மு.க., தொடர்ந்து எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X