புதுச்சேரியில் புதிய அரசியல் கட்சி : முன்னாள் எம்.எல்.ஏ., அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
03:37

புதுச்சேரி:புதுச்சேரியில், புதிய அரசியல் கட்சி துவங்க உள்ளதாக, முன்னாள் எம்.எல்.ஏ., மனோகர் கூறினார்.


அவர் நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரி காங்., அரசு செயலிழந்துள்ளது. மக்கள் நலத் திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். வரிக்கு மேல் வரி போட்டு மக்களை அரசு வாட்டி வதைக்கிறது. குப்பைக்கு வரி விதித்தனர்; பாதாள சாக்கடைக்கும் வரி விதித்தனர். குடிநீர் கட்டணத்தையும், வீட்டு வரியையும் பல மடங்கு உயர்த்தி விட்டனர்.அரசு நிறுவனங்களில் பணியாற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களது எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை.யாருக்கு அதிகாரம் என்பதுதான் பிரச்னையாக வெடித்துள்ளது. ஒருவர் மீது மற்றொருவர் பழியை போட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கின்றனர். எதிர்கட்சியினரும் மவுனமாக உள்ளனர்.


இந்த நிலை நீடித்தால், புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன், தனித்தன்மையை இழக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே, மக்களுக்காக குரல் கொடுப்பதற்காக, புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளேன். காமராஜர் வழியில் எங்கள் கட்சி புதுச்சேரியின் நலனுக்காக பாடுபடும். பல்வேறு கட்சிகளில் உள்ள அரசியல் தலைவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம். இவ்வாறு, மனோகர் கூறினார்.மனோகர், கடந்த 1996ம் ஆண்டில், உப்பளம் தொகுதியில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X