| உள்ளாட்சி தேர்தல்: நமச்சிவாயம் தகவல் Dinamalar
உள்ளாட்சி தேர்தல்: நமச்சிவாயம் தகவல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 டிச
2019
03:49

புதுச்சேரி:'புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது' என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.


அவர் நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டமும், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற கூட்டமும் நடத்தப்பட்டது. இதில், மக்கள் தொகை அடிப்படையில் வார்டு, கிராமப் பஞ்சாயத்து உள்ளிட்டவைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.அதன்படி, மறுசீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டுள்ளோம். மறுசீரமைப்பு முடிந்தவுடன், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். மறு சீரமைப்பு பணிகளை, 4 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என கூறியுள்ளோம். அதற்கான பணிகள் உள்ளாட்சித் துறை இயக்குனர் தலைமையில் துவங்கி விட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X