கடின உழைப்பே வெற்றிக்கு வழி! அடித்து சொல்கிறார் தமிழ் தலைவாஸ் வீரர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
04:07

கோவை:''விளையாட்டின் மீது ஆர்வம், கடின உழைப்பும் இருந்தால், வெற்றி எனும் படிக்கட்டை எளிதில் எட்டி விடலாம்,'' என்கிறார் தமிழ் தலைவாஸ் அணி வீரர் அஜித் குமார், 21.இந்தியாவின் புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன், சமீபத்தில் நிறைவடைந்தது. 12 அணிகள் 'ரவுண்டு ராபின்' முறையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.புள்ளிப்பட்டியலில் 'டாப்-6' இடம் பெறும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இம்முறை பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.இவ்வாண்டு, தமிழ் தலைவாஸ் அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் அஜித்குமார். இவரின் சிறப்பான ஆட்டத்தால், தமிழ் தலைவாஸ் அணிக்கு வெற்றிகளை தேடி தந்துள்ளார். கோவை கே.பி.ஆர்., கல்வி நிறுவனங்கள் சார்பில் நடந்த, மினி மராத்தான் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவரிடம்ஒரு கலந்துரையாடல்.எத்தனை வருடங்களாக கபடி விளையாடி வருகிறீர்கள் ?கபடி விளையாட்டை கடந்த ஆறு ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். 12ம் வகுப்பு படிக்கும் போது மாநில அளவிலான கபடி போட்டியில், சிறப்பான விளையாடி முதலிடம் பிடித்தோம். அதன் பின்னரே கபடியின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. உயர் கல்வியை கற்பகம் பல்கலையில் தொடர்ந்தேன். தேசிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், புரோ கபடி போட்டிக்கு தகுதி பெற்றேன்.புரோ கபடி லீக் போட்டியில் விளையாடிய அனுபவம்?சீனியர் வீரர்களின் அணியில் விளையாடியதின் மூலம் விளையாட்டு நுணுக்கம், போட்டி அனுபவம் போன்ற தகவல்களை கற்றுக்கொண்டேன். பல்வேறு பயிற்சியாளர்களின் ஆலோசனை கிடைத்தது.இளம் கபடி வீரர்களுக்கு ஏதாவது 'டிப்ஸ்?'மாணவர்கள் படிக்கும்போதே, ஏதாவது ஒரு விளையாட்டில் முழு கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டின் மீது கவனம், ஆர்வம், கடின உழைப்பும் இருந்தால், வெற்றி எனும் படிக்கட்டை எளிதில் எட்டி விடலாம்.அசராதீங்க அஜித்குமார்...இந்திய அணி உங்களுக்கு காத்திருக்கு!

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X