புக்கிரவாரி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
04:24

கள்ளக்குறிச்சி:புக்கிரவாரி ரயில் நிலையத்தில் தண்ணீர் மற்றும் மேம்பாலம் அமைக்கவும், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் எனவும் இப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



சின்னசேலம் ரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள புக்கிரவாரி ரயில் நிலையம் கடந்த 2007ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.நிலைய அலுவலர் அறை, பணி நிலைய மேலாளர் அறை, பார்சல் அறை, தொலைதொடர்பு நிலையம், மேல் வகுப்பு பயணிகள் தங்கும் அறை மற்றும் பயணிகள் கழிவறை உள்ள இந்த ரயில் நிலையத்தில் 3 நிலைய அலுவலர் மற்றும் 2 ரயில்வே கேட் பணியாளர்கள் பணியில் உள்ளனர்.இந்த ரயில் நிலையத்தில், மூன்று டிராக்குகள், இரண்டு பிளாட்பாரங்கள் உள்ளன. ரயில் நிலையம் வழியாக விருத்தாசலம் - சேலம் பாசஞ்சர், காரைக்கால் - பெங்களூரு பாசஞ்சர், சேலம் - விருத்தாசலம் பாசஞ்சர், பெங்களூரு - காரைக்கால் பாசஞ்சர், உள்ளிட்ட ரயில்கள் செல்கின்றன.பாசஞ்சர் ரயில்களில் தினசரி மேலுார், சிறுமங்கலம், ஈரியூர், விருகாவூர், தொரசலுார், அடரி, அசகளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.ரயில் நிலையத்தில், குடிநீர் தண்ணீர் வசதி, கழிவறை வசதிகள் மற்றும் மேம்பால வசதி இல்லாததால் பிளாட்பாரங்களை கடந்து செல்ல முடியாமலும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.


இந்த ரயில் நிலையத்தில் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காமல் செல்வதால், வெளி மாநில வேலைக்கு செல்பவர்கள், 12 கி.மீ., தொலைவில் உள்ள சின்னசேலத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ரயில் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். அதே போல், குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்துவதற்குரயில்வே நிர்வாகம் நடவடிககை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X