முகாமில் குவிந்தது மனுநடவடிக்கைக்கு காத்திருப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
04:24

முகாமில் குவிந்தது மனுநடவடிக்கைக்கு காத்திருப்புவால்பாறை நகரில் நீண்ட இடைவெளிக்கு பின், சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுத்தாங்க.அமைச்சர் வேலுமணி கிட்ட, 300க்கும் மேற்பட்ட மக்கள் மனு கொடுத்தாங்க. எல்லா மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுங்கனு, கலெக்டரு கிட்ட அமைச்சரு கொடுத்தாரு.ஆனா, 'லோக்சபா தேர்தல்ல, வால்பாறை மலையில அ.தி.மு.க.,வுக்கு ஒட்டு குறைஞ்சு இருந்துச்சு. மக்கள் நலத்திட்டத்துல, நாங்கள் எந்த குறையும் வைக்கல.முகாமுல கொடுத்த மனுக்களுக்கு கட்டாயம் நடவடிக்கை எடுப்பாங்க, யாரும் கவலைப்படாதீங்கனு,' அமைச்சர் பேசினாரு.அமைச்சரோட பேச்ச கேட்ட மக்கள், மனுக்கள் மீது எப்போ நடவடிக்கை எடுப்பாங்கனு தெரியாம, குழப்பத்துல காத்திருக்காங்க.ஒரு வாய்ப்பு இருக்குஇள ரத்தங்கள் நம்பிக்கைஉள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் இல்லை என்ற அறிவிப்பு, பொள்ளாச்சியில் தி.மு.க., இளம் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணமென, விசாரித்தோம்.தலைவருக்கு நேரடி தேர்தல் நடந்தா, கட்சியில சீனியர்களோட வாரிசுகளுக்கு தான் 'சீட்' கிடைக்கும். மறைமுக தேர்தல்ல, எப்படியாவது கவுன்சிலராகி, தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவியை பிடிக்க, ஒரு வாய்ப்பு இருக்கு.இந்த உற்சாகத்தை பயன்படுத்திக் கொள்ள சீனியர் தலைவர்கள் சகல முயற்சியில் ஈடுபட்டிருக்காங்க. தேர்தல் முடிஞ்சதும் சீனியர்கள் நிஜ முகத்த காட்டினாங்கனா, சும்மா இருக்க மாட்டோம், பொங்கி எழுந்திருவோம்னு, சொன்னாங்க.'சில்லிங்' விற்பனை ஜோருதடுக்கப்போவது யாரு?மடத்துக்குளம் நால்ரோடு அருகே, காலையில் 'வாக்கிங்' சென்ற நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ரோட்டில் சிலர் தள்ளாடிய படி வந்தனர். அதை கண்டு, நண்பர் ஆதங்கப்பட்டு கூறியதில் இருந்து...மதியம், 12:00 மணி தான் டாஸ்மாக் கடை திறக்கணும். ஆனா, மடத்துக்குளம் ஏரியாவுல, மதுக்கடையில வியாபாரம் நடக்கறத காட்டிலும், 'சில்லிங்'குல நல்லா கல்லா கட்டுறாங்க. 24 மணி நேரமும் ஜோரா நடக்குது வியாபாரம்.'சில்லிங்' விக்கற இடத்துல, குவாட்டருக்கு, 35 ரூபா 'எக்ஸ்ட்ரா' வாங்குறாங்க. ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் தலைமையில, 'சில்லிங்' வியாபாரம் நடக்கறதால, யாரும் கண்டுக்கறதே இல்ல.'அம்மா' இருந்தப்ப ஏழைகள் வருமானம் பாதிக்குதுனு, லாட்டரிய ஒழிச்சாங்க. இப்ப, ஆளுங்கட்சிக்காரங்க இப்படியெல்லாம் வருமானம் பாக்குறாங்க. சன்மானம் வாங்குற போலீசும், வியாபாரத்துக்கு பாதுகாப்பு கொடுக்கறாங்கனு, ஆதங்கப்பட்டாரு.கலெக்டரு உத்தரவுக்குஅவ்ளோதான் மரியாதைஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்துல, முதல்வர் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தினாங்க. அதுக்காக, பள்ளி மைதானத்த சுத்தம் செய்யறத போட்டோ எடுக்க போயிருந்தேன்.வருவாய்த்துறை, பேரூராட்சி அதிகாரிக, ஆளும்கட்சியினர் படு சுறுசுறுப்பா பள்ளி வளாகத்த பொக்லைன் வாகனம் கொண்டு வந்து சுத்தம் பண்ணினாங்க.ரெண்டு மாசத்துக்கு முன், இதே பள்ளிக்கு வந்த கலெக்டர், மாணவர்களோட புகாருக்கு நடவடிக்கை எடுத்து, 'மைதானத்துல இருக்கற புதரை முழுசா அகற்றணும்னு' வருவாய்த்துறை, பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாரு.கலெக்டரே உத்தரவிட்டும், அசையாத அதிகாரிக, விழாவுக்கு அமைச்சர் வர்றாருனு சொன்னதும், விழுந்தடிச்சு பள்ளி வளாகத்தை சுத்தம் பண்ணினாங்க. 'கலெக்டர் உத்தரவுக்கு அவ்ளோதான் மரியாதைனு' தெரிந்தது. இதை பார்த்த மாணவர்களோட மனசுல எப்படி பதிஞ்சிருக்கோ!பதவியேற்பு விழாவுல'மாஸ்' காட்டிய கமிஷனர்உடுமலை நகராட்சி அலுவலக ஊழியர்கள் சிலர், கமிஷனர் பதவியேற்பு விழா பத்தி பேசிக்கிட்டாங்க.புதிய கமிஷனர் பதவி ஏற்புக்கு, ஏற்கனவே பணியாற்றிய ஊரில் இருந்து, நண்பர்கள் படை சூழ வந்திருந்தாங்க.அரசியல்வாதிகள் பதவியேற்பு விழாவை மிஞ்சும் வகையில், விழா நடந்துச்சு. விழா முடிஞ்சதும், நண்பர்கள் டீம், திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவி, ஆழியாறு குரங்கு நீர் வீழ்ச்சிக்கு, 'ஜாலி டூர்' போனாங்க.உற்சாக பானம், அறுசுவை உணவு என, விருந்து களைகட்டுச்சு. அவங்க செய்த அலப்பறைய பார்த்து, அமைச்சர் உறவினர்களோனு துறை அதிகாரிகளே குழம்பிட்டாங்க. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை போல, 'மாஸ்' காட்டி பதவி ஏற்றவர், நகராட்சிக்கும், மக்களுக்கும் நல்லது செய்தால் சரினு, பேசிக்கிட்டாங்க.குறைதீர் கூட்டத்துலஅதிகாரிகள் ஆவேசம்உடுமலையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது. ஒரு விவசாயி பேசறப்ப, 'ரோடு போடுறதுல தப்பு நடந்திருக்கு. ரோட்டோரத்துல ரெண்டு பக்கமும் களி மண்ண கொட்டுனதால விபத்து நடக்குதுனு, முதல்வருக்கு மனு அனுப்பினேன்.அதுக்கு, 'ரோட்டோரத்துல மண் எடுத்து பயன்படுத்தவே திட்ட மதிப்பீடு போட்டு டெண்டர் விடப்பட்டதுனு' அதிகாரிக பதில் அனுப்பினாங்க.'களி மண் போட்டா ஈரத்தை உறிஞ்சாது, சேறும், சகதியுமா இருக்கும், வழுக்கும், விபத்து நடக்கும், பணியில தரமிலல்லைனு' புகார் பண்ணினா, முட்டாள் தனமா பதில் கொடுக்கறாங்கனு பேசினாரு.அதிகாரிகள குறை சொல்லி பேசியதும், ஆக்ரோஷமடைந்த மற்ற அதிகாரிக வாக்குவாதம் பண்ணினாங்க. நல்லது பண்ணினா பாராட்டுறதும், தப்பு பண்ணினா சுட்டிக்காட்டுறதும் விவசாயிகளோட இயல்புனு புரிஞ்சுக்குங்கனு, சொன்னதும் கூட்டத்துல அமைதி திரும்புச்சு.இன்ஸ்., டிரைவரு அலப்பறஆளும்கட்சி ஆதரவுல உதாரு'அதிகாரிக்கு டிரைவர் வேல பார்த்தா இப்படியெல்லாம் பண்ணலாமா' என, பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசார் பேசிக்கிட்டாங்க. என்ன விஷயம்னு விசாரித்தோம்.உடுமலை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு டிரைவரா இருக்கற ஒருத்தரு, சேவல் சண்டை சூதாட்டத்துல 'கில்லாடி'. அவரு, உடுமலையில இருந்து, சேவல்களை காருல ஏத்திட்டு, நள்ளிரவுல நண்பர்களோட அதிவேகமா போனாரு.'நைட் ரவுண்ட்ஸ்' பணில இருந்த போலீசார், அந்த கார துரத்தி பிடிச்சா, இன்ஸ்பெக்டர் டிரைவரு உள்ள இருந்தாரு. அதிவேகமாக கார் ஓட்டினதாக கேஸ் போட்டாங்க. வேற எந்த ஆக் ஷனும் எடுக்கல.ஆளும்கட்சி செல்வாக்குல, இதே ஊருல பல வருஷமா காலம் தள்ளும் அவரு, 'என்னை யாரும் ஒன்னும் செய்ய முடியாதுனு' மத்த போலீஸ் அதிகாரிக முன்னாடி, தெனாவெட்டாக உதாருவிடுறாரு.தேர்தலுக்கு கைகொடுக்கும் குப்பை மேட்டர்!பொள்ளாச்சி தேர்நிலையத்துல நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். வார்டு அரசியல் பத்தி நண்பர் சொன்னதில் இருந்து...இவ்வளவு நாளா சாக்கடை அடைச்சிருந்தாலும், குப்பை குவிஞ்சிருந்தாலும் யாரும் எப்படிப்பாக்கல. உள்ளாட்சி தேர்தல் வரப்போறதால, குப்பை அள்ளற விஷயத்துல போட்டி போடுறாங்க.உடுமலை ரோடு டீச்சர்ஸ் காலனியில, நகராட்சி ஊழியர்கள் குப்பை அள்ள வந்தாங்க. அங்க வந்த, தி.மு.க., பிரமுகர் ஒருத்தரு. 'ஏரியாவ நான் தான் சுத்தம் செய்யச் சொன்னேன்னு' கெத்து காட்டினாரு.இந்த தகவல கேள்விப்பட்டதும், ஆளும்கட்சி பிரமுகரும் அங்க வந்து, 'நாங்க சொல்லித்தான் குப்பை அள்ள வந்திருக்காங்கனு,' சொன்னதும் வாக்குவாதம் ஆயிருச்சு.அங்க இருந்த மக்கள், அவங்க ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பினாங்க. துப்புரவு தொழிலாளர்க, 'எங்க வேலைய செய்ய விடுங்கப்பானு' புலம்பினாங்க.உள்ளாட்சி தேர்தல்ல, நலத்திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்பாங்க. ஆனா, பொள்ளாச்சி நகராட்சியில குப்பை அள்ளறதே பிரசாரத்துக்கு கைகொடுக்குதுனா, உள்ளாட்சி நிலவரம் எப்படி இருக்குனு யோசிக்க வைக்குதுனு, சொன்னாங்க.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X