பாரம்பரியத்தை பரப்பும் பழங்கால கல்திட்டைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
04:26

வனத்துறை செயல்படுத்தி வரும் சூழல் சுற்றுலா திட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையில், அரிதாக காணப்படும் வரலாற்று சின்னங்களை பார்வையிடவும், ஏற்பாடு செய்தால், வரலாறு பாதுகாக்கப்படும்.அவற்றில் கல்திட்டைகள் முக்கியமானவை. இதில், இறந்த வீரர்களின் உடல்களை அடக்கம் செய்த பகுதியில், சதுர வடிவிலான மூன்று கற்களை அடுக்கி, அதன் கீழ் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை புதைப்பது 'கல்திட்டை' எனப்படும். இந்த கல்திட்டையின் உள்பகுதியில், பல்வேறு ஓவியங்களை வரைந்து வைப்பதும் பழக்கமாக இருந்துள்ளது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கல்திட்டைகள் மற்றும் கல்பதுக்கைகள் வரலாற்று சின்னமாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.மலையில் வரலாறுமேற்குத்தொடர்ச்சி மலையில் பல்வேறு இடங்களில் கல்திட்டைகள் கண்டறியப்பட்டு, அம்மலைத்தொடருக்கும், மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தி வருகின்றன.உடுமலை அருகே கோடந்துார், ஈசல்திட்டு, தளிஞ்சி உட்பட மலைவாழ் குடியிருப்பு பகுதிகளின் அருகே 25க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன. ஆனால், இவற்றின் வரலாறு தெரியாமல், படிப்படியாக அவை அழிந்து வருகின்றன.பாதுகாக்கணும்போதிய விழிப்புணர்வு இல்லாமல், அங்குள்ள பெரிய கற்களை அழிப்பது வழக்கமாகி விட்டது. வனப்பகுதியில், அரிதாக காணப்பட்ட, பல்வேறு கல்திட்டைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன.இதனால், மேற்குத்தொடர்ச்சி மலையின் வரலாறு, படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுற்றுலா பயணிகள் கல்திட்டைகளின் உள்பகுதியிலுள்ள உருவங்களை அழிக்கின்றனர்.உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியிலுள்ள கல்திட்டைகளை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கைக்கு, தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.வழிகாட்டும் கேரளம்கேரளா அரசு, மறையூர் உட்பட பகுதிகளிலுள்ள கல்திட்டைகளை பாதுகாக்க, அம்மாநில அரசு கம்பி வேலி அமைத்துள்ளது.அங்குள்ள பாறை ஓவியங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதுடன், அவற்றின் பாதுகாப்புக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்குள்ள வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பாக இருப்பதுடன், சுற்றுலா பயணிகளுக்கு வரலாறு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.தற்போது, தமிழக வனத்துறை செயல்படுத்தி வரும் சூழல் சுற்றுலா திட்டத்தில், இந்த வரலாற்று சின்னங்களையும் பார்வையிட அனுமதித்தால், விழிப்புணர்வு அதிகரிப்பதுடன், வரலாறும்பாதுகாக்கப்படும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X