ஆட்டம் காணும் அமெரிக்க நிறுவனம்: ஏற்றுமதியாளர் உஷாராக இருக்கணும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
04:49

திருப்பூர்:அமெரிக்காவை சேர்ந்த ஒன்பது ஆடை வர்த்தக நிறுவனங்கள் நஷ்ட அறிக்கை அளித்துள்ளன. இதனால், அந்நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ள ஆடை ஏற்று மதியாளர்கள் உஷாராக செயல்பட வேண்டுமென, வல்லுனர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.ஐரோப்பாவை தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஒன்பது ஆடை வர்த்தக நிறுவனங்களும், மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளன. நிதி நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், தாங்கள் நஷ்டத்தை சந்திப்பதாக, அமெரிக்க கம்பெனி சட்ட பிரிவு, 11ன் படி, அறிக்கை வெளியிட்டுள்ளன.இது குறித்து, தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது:ஐரோப்பிய ஆடை வர்த்தக நிறுவனத்தின் திவால் அறிவிப்பால், திருப்பூரில் உள்ள ஒருசில பெரிய நிறுவனங்கள், ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைக்கான பல கோடி ரூபாய் கைநழுவிப்போய்விடுமோ என்கிற அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில் தற்போது, ஆடை வர்த்தகம் சார்ந்த ஒன்பது அமெரிக்க நிறுவனங்கள், நஷ்டம் ஏற்படுவதாக அறிக்கை அளித்துள்ளன. ஆன்லைன் வர்த்தகத்தால், நேரடியாக ஆடை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும்; அதனால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் அந்நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.இது, திருப்பூர் உட்பட நாடுமுழுவதும் உள்ள ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மேலும் கவலையை ஏற்படுத்துகிறது.இவ்வாறு, நிதி நிலை மோசமடைந்த நிறுவனங்களிடமிருந்து பெறும் ஆடை தயாரிப்பு ஆர்டர்களுக்கு, ஏற்றுமதி காப்பீடுகள் மூலம் பாதுகாப்பு அளிப்பது மிகவும் அவசியம்.இந்த நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் அடுத்த நிலையான திவால் அறிவிப்பு வெளியிடலாம்; எனவே, பாதுகாப்பின்றி ஆர்டர்களை பெற வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X