தொடர் மழையால் அணைக்கு வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்வு!பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
05:19

உடுமலை;பருவ மழை தீவிரம் காரணமாக, உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருமூர்த்தி பஞ்சலிங்கம் அருவியும் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதோடு, அணைக்கு நீர்வரத்து குறைவால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும், கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படாததால், அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம், 29ம் தேதி, அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 63.55 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு, 349 கன அடியாகவும் இருந்தது. பருவ மழை தீவிரமடைந்து, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.நேற்று காலை நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு, 1,152 கனஅடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம், 67 அடியாகவும், நீர்இருப்பு, 2,182 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. நான்கு நாட்களில், அணை நீர்மட்டம், நான்கு அடி உயர்ந்துள்ளது.திருமூர்த்தி மலை திருமூர்த்திமலை பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக, மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில், காட்டாற்று வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகளுக்கு கடந்த மூன்று நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதே போல், நேற்றுமுன்தினம் காலை, பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மலையடிவாரத்திலுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலை, வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், கோவில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கவில்லை.நேற்று வெள்ள நீர் வடிந்ததால், நேற்று காலை கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு, நடை திறக்கப்பட்டு வழக்கம் போல், பூஜைகள் நடந்தன. பஞ்சலிங்கம் அருவியில், கருமை நிறத்தில், வெள்ள நீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டியதால், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.


மழையளவு


உடுமலை பகுதிகளில், கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நேற்றுமுன்தினம் காலை முதல் நேற்றுகாலை வரை, உடுமலையில், 23.60 மி.மீ., மழை பெய்துள்ளது.திருமூர்த்தி அணைப்பகுதியில், 20 மி.மீ.,; அமராவதி அணைப்பகுதியில், 9 மி.மீ.,; மடத்துக்குளம், 4 மி.மீ.,; திருமூர்த்திமலை ஆய்வு மாளிகை, 17 மி.மீ.,; நல்லாறு பகுதியில், 22 மி.மீ.,; பெதப்பம்பட்டி, 25 மி.மீ.,; கள்ளிபாளையம், 12 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. நேற்று, வானம் மேக மூட்டத்துடனும், லேசான மழையும் இருந்தது. பகல் நேரத்தில், ஒரு சில பகுதிகளில் வெயிலும் காணப்பட்டது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X