திருமூர்த்தி அணையில் முடங்கியது படகு சவாரி: மீண்டும் உயிர்ப்பிக்க நடவடிக்கை அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
05:21

உடுமலை:திருமூர்த்தி அணையில் முடங்கிய படகு சவாரியை, மீண்டும் உயிர்ப்பிக்க, நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலாத்தலமாக உள்ளது. இப்பகுதிக்கு சுற்றுலா வருவோர், திருமூர்த்தி அணையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில், தளி பேரூராட்சி சார்பில், 1990ல் படகு சவாரி துவக்கப்பட்டது.பின்னர், கடந்த, 2002ல், மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் படகுகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, படகுத்துறையில், ஐந்து படகுகள் இயக்கப்பட்டு, பெரியவர்களுக்கு, 25 ரூபாய், சிறியவர்களுக்கு, 15 ரூபாய், நான்கு நபர் பயணிக்கும் கால்மிதி படகில் செல்ல அரைமணி நேரத்துக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.இதற்கு சுற்றுலாப்பயணிகளிடம் நல்ல வரவேற்பும் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, படகு சவாரி முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால், அப்பகுதிக்கு சுற்றுலா வருவோர் படகு சவாரி செய்ய முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். படிப்படியாக சுற்றுலா சார்ந்த வர்த்தகமும் அப்பகுதியில் முற்றிலுமாக குறைந்து, விடுமுறை நாட்களில், கூட திருமூர்த்தி அணைப்பகுதி வெறிச்சோடுகிறது. இயக்கப்படாமல் ஒரங்கட்டப்பட்ட, படகுகளும் பயன்படுத்த முடியாத நிலையில், பரிதாப நிலைக்கு மாறியுள்ளது.படகுகளை புதுப்பிக்க செலவிட்ட தொகையை, மகளிர் சுய உதவிக்குழுவினர் செலுத்த முடியாததும், படகு சவாரி முடங்க முக்கிய காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே, தமிழக அரசு, சுற்றுலா பயணிகள் தேவைக்காக படகு சவாரியை மீண்டும் துவக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X