'லொடக்கு'களால் 'லொள்ளு'! அரசு பஸ்களில் பயணித்தாலே' கடகட' ... மழை பெய்தாலே நனையும் பயணிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
05:30

சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் ஒடும் அரசு டவுண் பஸ்களில் மழை பெய்தால் ஒழுகும் கூரை , கடகட சப்தத்துடன் ஒட்டை உடைசலாக ஒடுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.



கிராமங்களுக்கு செல்லும் அரசு டவுண் பஸ்கள் பல காலவாதியான பின்பும் இயக்கப்படுவதால் இவற்றின் ஜன்னல்கள், படிகட்டுகள், இருக்கைகள் உடைந்து காணப்படுகின்றன. பல பஸ்களில் விளக்குகள் கூட முறையாக எரிவதில்லை. இரவு நேரத்தில் பஸ்சிற்குள் உள்ள பயணிகளுக்கு நடத்துனரால் டிக்கெட் கொடுக்க கூட போதுமான வெளிச்சம் இல்லாமல்பஸ்கள் ஒடுகின்றன. மழை லேசாக பெய்தால் கூட பயணிகள் நனைகின்றனர். கிராமத்தில் இருந்து நகரத்தில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் நிலை படு மோசமாக உள்ளது. புத்தகப்பையுடன் மாணவர்களும் நனைந்து விடுகின்றனர். பள்ளம் வந்தால் குலுங்கும் பஸ்கள் குலுங்கும்போது ஜன்னல் ஓரம் நீட்டி கொண்டிருக்கும் கம்பிகள் குத்தி காயமடைவதும் தொடர்கிறது. குண்டும் குழியுமானரோட்டில் செல்லும் அரசு டவுன் பஸ்களின் சாகச பயணத்தை விரும்பாத மாணவர்கள் சிலர் ரோட்டில் செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகளிடம் லிப்ட் கேட்டு ஏறி செல்கின்றனர். தனியார் பஸ்களோ பள பளவென ரதம் போல் செல்கின்றன. இதேபோன்று கிராமங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்களையும் பளபள வென புதிய இயக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


அரசு புதிய பஸ்களை ரூட் பஸ்களாக மட்டுமே இயக்குகிறது. கிராமங்களுக்கு இயக்குவதில்லை.மதுரை-கன்னியாகுமரி, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு இயக்கப்பட்ட பழைய மொபசல் பஸ்களை காலாவதியான பின்பு கிராமங்களுக்கு டவுண் பஸ்களாக இயக்குகின்றனர். ஏற்கனவே பல ஆண்டுகள் ஓடியதால் இதன் கம்பிகள் கிராமத்தில் சேதமான ரோட்டில் ஒடும் போதுஉடைந்து விடுகின்றன.


பஸ்சின் படிகட்டுகள் முதல் ஜன்னல்கள் வரை சேதமடைந்த நிலையில் பஸ்கள் ஓடுகின்றன. விளக்குகள் கூட முறையாக எரியவில்லை. இருளில் பயணம் செய்யும் நிலை உள்ளது. புதிய பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- கோபாலகிருஷ்ணன், வியாபாரி,சாத்துார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X