ஒரே இடத்தில் 16 சடலம் எரிப்பு  
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
05:34

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் பலியான 16 பேர் உடல்கள் நேற்று ஒரே இடத்தில் எரிக்கப்பட்டன.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூரில், சக்கரவர்த்தி துணிக்கடை உரிமையாளர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடித்து விழுந்து 17 பேர் பலியாகினர். இதில், 16 பேர் நடூரை சேர்ந்தவர்கள். ருக்குமணி என்பவர் மட்டும் புளியம்பட்டியை சேர்ந்தவர்.நேற்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், அனைத்து உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில், ருக்குமணியின் உடலை உறவினர்கள் புளியம்பட்டிக்கு எடுத்துச் சென்றனர்.மீதமுள்ள, 16 பேர் சடலங்களையும் வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.'சம்பவத்துக்கு காரணமானவரை செய்யும்வரை உடல்களை வாங்க மாட்டோம்' என, உறவினர்கள் கூறினர். அவர்களை சமாதானம் செய்த போலீசார், அனைத்து உடல்களையும் ஆம்புலன்ஸ் மூலம், இரவு, 7:00 மணிக்கு, மேட்டுப்பாளையம் நகராட்சி கோவிந்தம்பிள்ளை மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அனைத்து சடலங்களும் எரியூட்டப்பட்டன.போலீஸ் தடியடி: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து கொண்டிருக்கும் போது, போலீசாருக்கும், தலித் அமைப்பின் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X