குடிநீரா... அப்படின்னா... கடுப்பில் காமராஜர்காலனி மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
05:52

சிவகாசி:குடியிருப்பு பகுதி கிணற்றில் கழிவுகள், துார்வாரப்படாத வாறுகால் என சிவகாசி விளாம்பட்டி காமராஜர் காலனி பகுதி மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.இப்பகுதியில் இது நாள் வரையிலும் குடிநீர் கிடைத்ததே இல்லை. புழக்கத்திற்கு என வரும் தண்ணீரும் அனைவருக்கும் போதவில்லை.


குடியிருப்பு பகுதி அருகே பயன்பாட்டில் இல்லாத கிணறு உள்ளது. இக்கிணற்றில் நகரின் கழிவுகளை கொட்டுகின்றனர்.இதனால் நிலத்தடி நீருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். மாரியம்மன் கோயில் திடல் மழை காலங்களில் சகதியாகுவதால் இங்கு பேவர் பிளாக் அமைக்கலாம். பாலர் பள்ளி செல்லும் தெரு மற்றும் பள்ளி முன்புறம் கழிவுநீர் தேங்கி உள்ளது. எந்த தெருக்களிலும் வாறுகால் துார்வாரப்படவில்லை. கொசுத் தொல்லையால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். தெருக்களில் சிமென்ட் ரோடு பெயர்ந்து கால்களை பதம் பார்க்கிறது. சமுதாய கூடம் அருகே உள்ள நுாலகம் சேதமடைந்து செயல்படாமல் உள்ளது. நுாலகம் பின்புறம் உள்ள கிணறு முட்புதர்கள் சூழ்ந்து பயன்பாட்டில் இல்லை.


கிணற்றினை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.எந்த தெருக்களிலுமே வாறுகால் துார்வாரப்படவில்லை. மக்களே பணம் வசூல் செய்து துார்வாருகிறோம். குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒருமுறையாவது வாறுகாலை துார்வார வேண்டும். கொசு உற்பத்தியாகி இரவில் மட்டுமல்லாது இரவிலும் கடிக்கிறது. இப்பகுதியில் இதுநாள் வரையிலும் குடிநீர் கிடைக்கவே இல்லை. உப்பு தண்ணீரையே குடிக்க பயன்படுத்துகின்றனர்.

- கருப்பசாமி, ஊர் நாட்டாமை, காமராஜர் காலனி.


மழை காலங்களில் மாரியம்மன் கோயில் வளாகம் முழுவதும் சகதியாக மாறி விடுகிறது. இங்கு குடியிருப்பு பகுதி கிணற்றில் குழந்தைகள், வயதானவர்கள் தவறி விழ வாய்ப்புள்ளது. நுாலகம் அருகிலுள்ள கிணறு தண்ணீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. தற்போது அதுவும் துார்ந்து விட்டது. எனவே கிணற்றினை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

- மருதமுத்து, துணை நாட்டாமை, காமராஜர் காலனி.


அதிக மக்கள் தொகை இருப்பதால் ஒரு சுகாதார வளாகம் போதவில்லை. திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். கூடுதலாக சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். தெருக்களில் சிமென்ட் ரோடு சேதமடைந்து கால்களை பதம் பார்க்கிறது. மயானத்தில் குளியில் தொட்டி ஏற்படுத்துவதோடு,சேதமடைந்த மின் கம்பத்தினை மாற்ற வேண்டும்.

- முனியாண்டி, கிராம கணக்காளர், காமராஜர் காலனி.


பாலர் பள்ளி செல்லும் தெருவில் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. குழந்தைகள் விபரீதம் தெரியாமல் இதன் அருகிலே விளையாடுகின்றனர். இதனால் குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பாலர் பள்ளி பகுதியில் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சிவலிங்கம், பட்டாசு தொழிலாளி, காமராஜர் காலனி,

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X