| லைசென்ஸ் இன்றி ஓடும் ஆட்டோக்களில் Dinamalar
லைசென்ஸ் இன்றி ஓடும் ஆட்டோக்களில்
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 டிச
2019
07:30

சிவகங்கை:சிவகங்கையில் லைசென்ஸ் இன்றி ஓடும் ஆட்டோக்களை வைத்து கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.நகரில் மதுரை முக்கு, பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் ஆபீஸ், அரசு மருத்துவமனை உட்பட 100க்கும் மேற்பட்ட ஸ்டாண்ட்களில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவை தவிர ேஷர் ஆட்டோக்களும் ஓடுகின்றன. ஆட்டோக்களில் உரிமையாளர், ஓட்டுபவர் போட்டோவுடன் கூடிய, வாகன எண், லைசென்ஸ் எண், முகவரி போன்ற விபரங்கள் இடம் பெற வேண்டும். ஒரு ஆட்டோவில் 3 நபர்களுக்கு மேல் ஏற்றக்கூடாது. இதை வட்டார போக்குவரத்து அலுவலர் கண்காணித்து, விதிமீறும் ஆட்டோ உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இதை அவர்கள் கண்டுகொள்ளாததால், நகரில் லைசென்ஸ் இன்றி ஆட்டோக்கள் ஓடுகின்றன.இந்த ஆட்டோக்களை லைசென்ஸ் பெறாதவர்கள் ஓட்டுகின்றனர். உரிய லைசென்ஸ் இன்றி ஓடும் ஆட்டோக்களால் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே விதிமீறி ஓடும் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகர் மட்டுமின்றி மாவட்ட அளவில் விதிப்படி ஓடாத ஆட்டோக்களை பறிமுதல் செய்ய எஸ்.பி., உத்தரவிட்டார். ஆனால், அந்தந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் கண்டு கொள்ளாததால் சிவகங்கை போன்று முக்கிய நகரில் லைசென்ஸ் இன்றி ஆட்டோக்கள் அதிகளவில் ஓடுகின்றன, என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X