2,524 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்: மாவட்டத்தில் தொடங்கியது ஏற்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
08:14

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில், 2,524 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.


ஈரோடு மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சி, 42 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. முதற்கட்டமாக, 225 பஞ்சாயத்து தலைவர், 2,097 பஞ்சாயத்து கவுன்சிலர், 14 யூனியனில், 183 யூனியன் கவுன்சிலர் மற்றும், 19 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் என, 2,524 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள, 1,576 ஓட்டுச்சாவடியில், 4,47,588 ஆண்கள், 4,60,532 பெண்கள், திருநங்கை, 40 என, 9,08,160 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். வரும், 6 முதல், 13 வரை வேட்பு மனுத்தாக்கலும், 16ல் வேட்பு மனு ஆய்வு, 18ல் வேட்பு மனு திரும்ப பெறுதலும், 27ல் முதற்கட்ட ஓட்டுப்பதிவும், 30ல் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஜன., 2ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. பஞ்., கவுன்சிலர் பதவிக்கு, 200 ரூபாய், பஞ்., தலைவர் தேர்தலுக்கு, 600 ரூபாய், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு, 600 ரூபாய், மாவட்ட பஞ்., கவுன்சிலர் பதவிக்கு, 1,000 ரூபாயும் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பினர், பாதி தொகை செலுத்தினால் போதும். பஞ்., கவுன்சிலர், 9,000 ரூபாய், பஞ்., தலைவர், 34 ஆயிரம் ரூபாய், யூனியன் கவுன்சிலர், 85 ஆயிரம் ரூபாய், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், 1.70 லட்சம் ரூபாய் வரை செலவிடலாம். தேர்தல் முடிந்து, 30 நாட்களுக்குள், உரிய அலுவலரிடம் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். மற்ற விபரங்களை, அந்தந்த பகுதி யூனியன், பஞ்சாயத்து மற்றும் ஈரோட்டில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் அறியலாம். தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முதற்கட்ட தேர்தலுக்கான பணி தீவிரமாகியுள்ளது.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X