| எதிர்ப்பை மீறி மதுக்கடை திறப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு Dinamalar
எதிர்ப்பை மீறி மதுக்கடை திறப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 டிச
2019
10:01

கரூர்: கிருஷ்ணராயபுரத்தில், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, புதிய டாஸ்மாக் திறக்கப்பட்டதை கண்டித்து, மது பாட்டிலுடன், 20க்கும் மேற்பட்ட மக்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி சாலையில் பொது மக்களின் எதிர்ப்பை மீறி, கடந்த, 30ல் இரவோடு இரவாக புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், 50க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக கடையை மூடிவிட்டு அதிகாரிகள் சென்றனர். இந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த, 25ல் கலெக்டரிடம் மனு அளித்தனர். ஆனால் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கடை திறக்கப்பட்டுள்ளது. கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், அதே இடத்தில் டாஸ்மாக் இருந்தது. அதனருகே, 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கடை மூடப்பட்டது. அந்த இடத்தில் மீண்டும் கடை திறந்தால் பல பிரச்னைகள் ஏற்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X