பழமையான அரசு கட்டடங்கள் கணக்கெடுப்பு புதிதாக கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2019
01:44

மதுரை :மதுரை மாவட்ட உள்ளாட்சிகளில் இடியும் நிலையிலுள்ள கட்டடங்களை கணக்கெடுக்க ஊரக வளர்ச்சித்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. புதிய கட்டடங்கள்

கட்டவும் முடிவு செய்துள்ளது.



இம்மாவட்டத்தில் 13 ஒன்றியங்களுக்குட்பட்ட 420 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 1600 கிராமங்கள் உள்ளன. இவற்றில் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி மன்றம், குடிநீர் மேல்

நிலைத்தொட்டி, துவக்கபள்ளி கட்டடங்கள் ஊரக வளர்ச்சி முகமை மூலம் கட்டப்படுகின்றன.

சில கிராமங்களில்

குடிநீர் மேல்நிலைத்

தொட்டிகள், ஊராட்சி மன்ற கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள் மோசமாக இடியும் நிலையில் இருப்பதாக கிராமத்தினர் தொடர்ந்து புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.

அதையடுத்து 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் வினய் உத்தரவிட்டார்.

ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரியங்கா மேற்பார்வையில் ஆய்வு நடந்தது. செயற்பொறியாளர் அனுராதா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் செல்லத்துரை தலைமையில் பி.டி.ஓ.,க் கள் இதில் ஈடுபட்டனர்.

இருபதாண்டுகளுக்கு முன் 212 கட்டடங்கள் கட்டப்பட்டதும், அதில் ஏழு கட்டடங்கள் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில் சில கட்டடங்கள் இடியும் நிலையிலுள்ளன.அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு கட்டுமான விதிகளுக்குட்பட்டு காலக்கெடு முடிந்த கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இடியும் நிலையிலுள்ள கட்டடங்களுக்கு அரசிடம் நிதி பெற்று புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்றார்.


 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X