ஏற்பாடு! உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வக பணி...மாவட்டத்தில் 246 அரசு பள்ளிகளில் அமைகிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

06 டிச
2019
07:12
பதிவு செய்த நாள்
டிச 06,2019 00:48

கடலுார்:கடலுார் மாவட்டத்தில், 246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



தமிழகத்தில், அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த, கல்வி துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அரசு பள்ளிகளில் கணினி, மடிக்கணினி வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது.இதற்காக, இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஒன்றிரண்டு எண்ணிக்கையில் கணினி, மடிக்கணினி உள்ளதால், கல்வி கற்பிப்பதிலும், ஆசிரியர்கள், மாணவ, மாணவியரின் வருகை பதிவேடு விவரங்கள், நலத்திட்ட உதவி பெறுவோர் எண்ணிக்கை, அனைத்து தேர்வு தொடர்பான விவரங்கள் பதிவேற்றம் செய்வதிலும், நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்டம் வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்க பள்ளி கல்வி துறை திட்டமிட்டது.


அதன்படி, கடலுார் மாவட்டத்திலும் உயர் ரக தொழில் நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடக்கிறது. மாவட்டத்தில் 246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இதில், 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 10 கம்ப்யூட்டர்கள், மேல்நிலை பள்ளிகளில் 20 கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு, இணையதள வசதி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதுவரை 206 பள்ளிகளில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளில் ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவியருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படும். குறிப்பாக, கம்ப்யூட்டர் இயக்குவது, பாடம் சார்ந்த தகவல்கள் பெறுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். மேலும், ஆசிரியர், மாணவ, மாணவியரின் வருகை பதிவேடு விவரங்கள், அனைத்து தேர்வுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யலாம். நுழைவுத் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பணிகள் முடிவடைந்ததும், விரைவில் கணினி மூலமாக கல்வி கற்பிக்கப் படும்' என்றார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X