உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2019
01:07

கடலுார்:உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்ற குழப்பதில், வேட்பு மனுக்கள் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்படாததால், கடலுார் ஒன்றிய அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.


கடலுார் ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, உதவி தேர்தல் நடந்தும் அலுவலர் பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான வேட்பு மனு வழங்குவதற்கு, ஒன்றிய அலுவலகத்திற்கு, நேற்று மாலை 5:00 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இப்பணிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் நேற்று மாலை, கடலுார் ஒன்றிய அலுவலத்திற்கு வந்திருந்தனர்.இரவு 7:00 மணி வரை, இவர்களுக்கு வேட்பு மனுக்கள் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்படவில்லை. கடலுார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கலெக்டர் தலைமையில் நடந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கூட்டத்திற்கு சென்று விட்டனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட சில ஒன்றியத்தில் நியமிக்கப்பட்ட உதவி தேர்தல் நடந்தும் அலுவலர்களுக்கு , வேட்பு மனுக்கள் வழங்கப்பட்ட நிலையில், கடலுார் ஒன்றியத்தில் வழங்காததால், உதவி தேர்தல் நடந்தும் அலுவலர்கள், தேர்தல் நடக்குமா என்ற குழப்பத்தில் காத்திருந்தனர். இதை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காத்திருந்திந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம், நாளை (இன்று) காலை 7:30 மணிக்கு தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X